இந்த சேவை மூலம் வீடியோ, பாட்டு, கேம்ஸ் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்கும் அளவில் தன் டேட்டா பேஸ் அமைப்பையும் தொழில் நுட்ப வசதியையும் உயர்த்த இருக்கிறது. தற்போது இந்தியாவின் 22 தொலைதொடர்பு மண்டலங்களில் 20ல் பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையினை வழங்கி வருகிறது. இதன் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5கோடி.
பி.எஸ்.என்.எல். புதுத்திட்டம்
கடந்த ஆறு மாதங்களில் தன் 3ஜி சேவைக்கு பத்தாயிரம் சந்தாதாரர்களையே பிடிக்க முடிந்த பி.எஸ்.என்.எல்., இந்த சேவையை வழங்க பன்னாட்டளவிலான நிறுவனங்களின் உதவியை நாடுகிறது.
அதிவேக இன்டர்நெட், மொபைல் டிவி, வீடியோ கான்பரன்சிங், வேகமான பைல் டவுண்லோட் எனப் பல வசதிகளை மொபைல் போனில் தரக்கூடிய 3ஜி சேவையினைச் சிறப்பான முறையில் வழங்க பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளன.
வரும் டிசம்பர் மாதம் இதற்கான ஏலத்தை மைய அரசு நடத்தி முடித்தால் அடுத்த ஆண்டு முதல் உலக அளவில் இயங்கும் பல நிறுவனங்கள் தனியா கவோ அல்லது இந்திய தனியார் நிறுவனங்களுடன் இணைந்தோ இந்த சேவையை வேகமாகவும் மக்களை எளிதில் அடையும் வகையிலும் தரத் தொடங்கிவிடுவார்கள்.
எனவே அதற்குள் தாங்களும் முந்திக் கொள்ள வேண்டும் என இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் முயற்சிக்கின்றன. சென்ற வாரம் எம்.டி.என்.எல். இதற்கான டெண்டரைக் கொண்டு வந்தது. பி.எஸ்.என்.எல். விரைவில் அதே பாணியைப் பின்பற்றும் எனத் தெரிகிறது.
வரும் செப்டம்பரில் தன் 3ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைய ஒரு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 100 நகரங்களில் இந்த சேவையை வழங்குவதற்கானக் கட்டமைப்பினைக் கொண்டுள்ள பி.எஸ்.என்.எல். விரைவில் இதனை 1000 நகரங்களுக்கு விரிவடையச் செய்திடும் திட்டத்தினையும் மேற்கொள்ளும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment