மோட்டரோலாவின் புதிய வகை மொபைல்கள் அறிமுப் படுத்தப் பட்டுள்ளன.
இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் 7 வகையான புதிய செல்போன்களை அறிமுகப் படுத்தி இருப்பதாகவும், இதில் 3.1 பிக்ஸல் கேமராவுடன் கூடிய ஸ்லீக் ஸ்லைடர் இஸட் எண் 300 மற்றும் 6 மோடோயுவா டபிள்யூ எக்ஸ் ஜெனரேஷன் செல்போன்களை அறிமுகப்படுத்தப் பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இதில் எஃப்எம் வானொலியுடன் கூடிய கேண்டிபார் ஹாண்ட் செட் வசதி மற்றும் கேமரா ஷேரிங் வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட செல்போன்களும் அடங்கும்.
இன்டர்நெல் பிரவுசிங் வசதியுடனும், புளூடூத் வசதியுடனும் மொபைல்போன்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. எடிட்டிங் வசதி , ஜூம் வசதி ஆகியன இதில் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் தொடர்ந்து பேசலாம், 700 எஸ்எம்எஸ் அனுப்பலாம் என அந்நிறுனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment