ஒரிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம், சந்திப்பூர் கடல் பகுதியில், ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்தின் இலக்கை நோக்கிச் சென்று தாக்கும், பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரித்வி -2 ஏவுகணை மொபைல் லாஞ்சர் மூலம் சோதனை செய்யப்பட்டது. இது, 250 கி.மீ., முதல் 300 கி.மீ., தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. நம் நாட்டின் போர்த்திறன் நடவடிக்கைகளை மேம்படுத்தவே, இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. 700 கி.கி., எடையுடன், 250 கி.மீ., சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த, ஏவுகணையின் எடையை 1,000 கி.கி., வரை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கடந்த 1988ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22ம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, முதன் முதலில் பிரித்வி ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. அதன் பின், பல்வேறு ஏவுகணைச் சோதனைகள் நடத்தப்பட்டன.
பிரித்வி-2 ஏவுகணை சோதனை முழு வெற்றி
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment