தற்போது அறிமுகமாகும் மத்திய மற்றும் உயர் ரக மொபைல்களில் ஜி.பி.எஸ். என்ற வசதி உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. சிறப்பான இந்த வசதியை அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் நாள் விரைவில் வர இருக்கிறது. இந்த வசதி என்ன தருகிறது என்றும் அது எதனைக் குறிக்கிறது என்றும் இங்கே பார்க்கலாம். இந்த பூமியில் நீங்கள் எங்கே இருக்கிறீகள் என்பதை அறிந்து உங்களுக்கு வழி காட்டும் தொழில் நுட்பமே குளோபல் பொசிசனிங். மொபைல் போன் வழியாக இந்த தொழில் நுட்பம் பொதுமக்களுக்கு இந்தியாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. தற்போது மேல் நாடுகளில் மக்கள் இவ்வசதியை பெற்று அனுபவித்துக் கொண்டிருக் கின்றனர். விரைவில் டெலிபோன் போல அனைவருக்கும் தேவைப்படும் ஒரு சாதனமாக ஜி.பி.எஸ். மொபைல் ரிசீவர்கள் அமைய இருக்கின்றன. பூமியைச் சுற்றி இதற்கென பறக்கவிடப்பட்டுள்ள சாட்டலைட்கள் கொண்ட நெட்வொர்க் மூலம் குளோபல் பொசிசனிங் சிஸ்டம் செயல்படுகிறது. இந்த சாட்டலைட்களால் உலகில் எந்த பகுதியில் உள்ள ஒரு பொருளை அல்லது ஒருவரை அவர் எங்கே இருக்கிறார் என்று துல்லியமாகக் காட்ட முடியும். மிகத்துல்லியமான வளையப் பகுதியில் மணிக்கு 7000 மைல் வேகத்தில் ஒரு நாளில் பூமியை இரண்டு முறை இவை சுற்றி வருகின்றன. ஒருவர் ஜி.பி.எஸ். வசதி கொண்ட மொபைல் போன் அல்லது வேறு சாதனத்திலிருந்து சிக்னல்களை சாட்டலைட்டுக்கு அனுப்பும்போது அவற்றை மூன்றுக்கு மேற்பட்ட சாட்டலைட்கள் பெறுகின்றன. அந்த சாட்டலைட்கள் பதில் சிக்னல்களை பூமியில் உள்ள ஜி.பி.எஸ். ரிசீவர்களுக்கு அனுப்புகின்றன. இந்த ரேடியோ சிக்னல்களைப் பெறும் ரிசீவர்கள் எவ்வளவு நேரத்தில் இந்த சிக்னல்கள் தங்களை வந்தடைந்தன என்று கணக்கிட்டு பூமியிலிருந்து அதன் தூரத்தைக் கணிக்கின்றன. அனைத்து சாட்டலைட் சிக்னல்களுடன் இந்த கணிப்பு ஒப்பு நோக்கிப் பார்க்கப்பட்டு சிக்னல்களை அனுப்பியவர் எங்கிருக்கிறார் என்று அறிந்து அவரின் சாதனத்திற்கு தகவல் அனுப்பப்படுகிறது. அவருடைய சாதனத்தில் உள்ள அந்த ஊர் மேப்பில் இடம் காட்டப்படுகிறது. அவர் வேறு இடம் குறித்து சிக்னல் அனுப்பினால், இதே முறையில் அந்த இடம் உள்ள தூரம் கணக்கிடப்பட்டு அவர் அந்த இடத்தை அடையும் வழியும் காட்டப்படுகிறது. இவ்வாறு முக்கோண வடிவில் சிக்னல்கள் பரிமாற்றம் ஏற்பட்டு ஒருவர் இருக்கும் இடம் அறியப்படுகிறது. இதே அடிப்படையில் நகரும் ஒரு வாகனத்திலிருந்து கிடைக்கும் சிக்னல்களைக் கொண்டு அதன் வேகம், செல்லும் இடம் கணக்கிடப்பட்டுக் காட்டப்படுகிறது. இந்த சாட்டலைட்கள் எத்தகைய சீதோஷ்ணநிலையிலும் செயல்படுபவையாகும். அதே போல சிக்னல்கள் பூமியில் உள்ளவற்றால் தடைபட்டால் மற்ற வழிகளில் சிக்னல்கள் அனுப்பப்பட்டு அவை சரி செய்யப்படுகின்றன. சாட்டலைட்கள் சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைக்கும் மின்சக்தியால் செயல்படுவதால் எந்த நேரமும் இயங்கும் தன்மை கொண்டவை. அவற்றின் நிலைப்பாட்டில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு தடம் மாறினால் அவற்றைச் சரி செய்திடும் வகையில் சாட்டலைட்டில் சிறிய ராக்கெட்டுகள் இயங்குகின்றன. பறக்கும் விமானங்கள், கடலில் செல்லும் கப்பல்கள் ஜி.பி.எஸ். வசதியைப் பயன்படுத்தியே தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.
குளோபல் பொசிசனிங் மொபைல்
ஜி.பி.எஸ். சாதனத்தைக் கையாள எந்தவிதமான நிபுணத்துவமும் தேவையில்லை. எளிதில் புரியும்படி தகவல்களைக் கொடுக்கவும் பெற்று அறியவும் இந்த சாதனங்களில் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. எனவே இந்த சிஸ்டம் குறித்து அறியாதவர்களும் இதனைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.
இந்தியாவில் ஜிபிஎஸ் சர்வீஸ் 1990ல் தொடங்கினாலும் மக்களிடையே அவ்வளவாகப் பரவவில்லை. புனேயில் உள்ள ஒரு நிறுவனம் லாரிகள் மற்றும் பிற வாகனங்களை ஜிபிஎஸ் மூலம் கண்டறியும் சேவையினைத் தருகிறது.
மொபைல் போன்களில் பல போன்கள் ஜிபிஎஸ் வசதி கொண்டவையாக வந்துள்ளன. நோக்கியா போன்களில் இந்த வசதிக்கான சர்வர் இணைப்பை ஆக்மெண்ட்ரா நிறுவனத்தின் வியூ ரேஞ்சர் என்ற சாப்ட்வேர் தருகிறது.
ஏர்டெல் நிறுவனம் இந்த சேவையினை பிளாக் பெரி 8800 போன்களில் தருகிறது. இத்தகைய போன்களின் இன்றைய விலை சற்று அதிகமாக இருந்தாலும், விரைவில் குறையும் வாய்ப்புகளும் உள்ளன
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment