பஞ்சாப் மாநிலத்தில் பிங் என்ற பெயரில் ரூ.499 விலையில் வண்ணத்திரையுடன் கூடிய மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் சண்டிகார் மாநிலங்களில் பிங் மொபைல் சேவை மக்களிடையே பிரபலமான ஒன்றாகும். 8,000 சில்லரை விற்பனை மையங்கள் மூலம் இது மக்களுக்கு சேவை செய்து வருகிறது. ஏறத்தாழ 270 நகரங்களிலும் 2,050 கிராமங்களிலும் இதன் நெட்வொர்க் செயல்படுகிறது
ரூ. 500க்கு மொபைல்
வாழ்க்கையில் அனைத்து நிலைகளில் உள்ளவர்களுக்கும் தொலைதொடர்பு வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மலிவு விலையில் இந்த போனை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளதாக இதனைத் தயாரித்த எச்.எப்.சி.எல். இன்போடெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த போன் சேவை நிறுவனம் ஒன்றின் திட்டத்துடன் தரப்படுவதால் ஒவ்வொரு போனுக்கும் அதற்கான எண்ணும் கிடைக்கிறது. இதற்கென உள்ள ஸ்பெஷல் ரீ சார்ஜ் கார்டுகள் மூலம் (ரூ.151, ரூ.201 அல்லது ரூ.251) சேவையைத் தொடர்ந்து பெறலாம்.
லோக்கல் கால்களுக்கு விநாடிக்கு ஒரு பைசாவும் (ஒரு நிமிடத்திற்கு 60 காசு) எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.1.50ம் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சி.டி.எம்.ஏ. வகை சேவை ஆகும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment