கூடுதல் நினைவகம்: நோக்கியா போனில் 81 எம்பி மெமரி உள்ளது. 8 ஜிபி மைக்ரோ எஸ்.டி. கார்ட் தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை உயர்த்தலாம். ஐபோன் இரு மாடல்களில் 8 மற்றும் 16 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இவற்றை உயர்த்த முடியாது. நீட்டிப்பதற்கான மெமரி ஸ்லாட் இல்லை. ஐ போனின் 2ஜி போனிலும் இந்த குறை உள்ளது
ஐ போனில் இல்லாதது நோக்கியாவில் உள்ளது
* நோக்கியா 5800 போனில் நிறைய மியூசிக் பாடல்கள் பதியப்பட்டுத் தரப்படுகின்றன. ஆப்பிள் போன் வைத்துள்ளவர்கள் அதன் இணையதளமான ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் சென்று பாடல்களை இறக்கிப் பதியலாம் என்றாலும் அவை இலவசம் இல்லையே.
* நோக்கியாவின் பேட்டரி ஜி.எஸ்.எம். வகை தொடர்புகளில் ஒன்பது மணி நேரம் இயங்குகிறது. எந்த பயன்பாட்டில் இல்லை என்றால் இது 17 நாட்களுக்கு அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான நோக்கியா 5800 ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனுக்குச் சரியான போட்டியைத் தந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் நோக்கியாவில் உள்ள சில சமாச்சாரங்கள் ஐ போனில் இல்லை என்பது தெளிவாகிறது. அவற்றை இங்கு காணலாம்.
முதல் முதலில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2007ல் ஐ போன் குறித்து செய்தி வெளியிட்டபோது அனைத்து மொபைல் போன் நிறுவனங்களும் தாங்களும் ஏதாவது செய்திட வேண்டும் எனத் துடித்தன. பல நிறுவனங்களிடமிருந்து ஐ போனில் உள்ளதைப் போல டச் ஸ்க்ரீன் கொண்டு போன்கள் வந்தன. ஆனால் ஐ போனின் டச் ஸ்கிரீன் அளவிற்கு யாரும் வர முடியவில்லை. நோக்கியா இதனை அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தது. பலரும் ஏன் நோக்கியா டச் ஸ்கிரீன் போன் ஒன்று தர மறுக்கிறது என்று கேட்கும் அளவிற்கு நோக்கி யாவின் அமைதி இருந்தது. இந்த கேள்வி களுக் கெல்லாம் பதிலாக நோக்கியா 5800 வெளி வந்துள்ளது. ஆனால் மற்ற நிறுவனங்களின் டச் ஸ்கிரீன் போன்களெல்லாம் தர முடியாத போட்டியை ஐ போனுக்கு நோக்கியாவின் போன் தருமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல முடியும். இனி சில வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்
கேமரா மற்றும் வீடியோ ரெகார்டிங்: நோக்கியாவின் முதல் டச் ஸ்கிரீன் போன் 3.2 மெகா பிக்ஸெல் கேமரா கார்ல் ஸெய்ஸ் லென்ஸுடன் 3 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பேக்வேர்ட் கேமராவும் தரப்பட்டுள்ளது.
ஆப்பிள் 3ஜி ஐ போனில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளாஷ் சப்போர்ட் இல்லை. நோக்கியா நொடிக்கு 30 பிரேம்கள் வேகத்தில் வீடியோ ரெகார்டிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 640 து 480 ஆக உள்ளது. 4 எக்ஸ் வீடியோ டிஜிட்டல் ஸூம் கொண்டுள்ளது. போனின் முன் பக்க கேமரா வீடியோ அழைப்பு வசதிக்கு தரப்பட்டுள்ளது. இதில் 5 மணி நேரம் வீடியோ இயக்கிப் பார்க்கலாம். 3.6 மணி நேரம் வீடியோ ரெகார்டிங் செய்யலாம்.
டிஜிட்டல் மியூசிக்: உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தயாரிப்பாளரான நோக்கியா, தன் 5800 போன் மூலம் டிஜிட்டல் மியூசிக் பிரிவிலும் ஆப்பிள் நிறுவனத்தை போட்டிக்கு அழைத்துள்ளது. வரும் ஆண்டு தொடக்கம் முதல் ‘இணிட்ஞுண் ஙிடிtட Mதண்டிஞி’ என்ற மியூசிக் ஸ்டோர் வசதியினை இலவச பதிவாக ஓர் ஆண்டு தர இருக்கிறது. மேலும் 5800 போனில் நிறைய மியூசிக் பாடல்கள் பதியப்பட்டுத் தரப்படுகின்றன. ஆப்பிள் போன் வைத்துள்ளவர்கள் அதன் இணையதளமான ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் சென்று பாடல்களை இறக்கிப் பதியலாம் என்றாலும் அவை இலவசம் இல்லையே. டவுண்லோட் செய்வதற்கென எந்த சலுகைத் திட்டத்தினையும் ஆப்பிள் அறிவிக்கவில்லை.
மாற்றக்கூடிய பேட்டரி: ஆப்பிள் 3ஜி ஐபோனில் நமக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது. நாமே மாற்றக் கூடிய பேட்டரி அதில் இல்லை. பேட்டரி இணைத்தால் எடை கூடும் என்று ஆப்பிள் பேட்டரியை வைக்க வில்லை என அறிவித்தது. ஆனால் மார்க்கட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பேட்டரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் நோக்கியா ஊரோடு ஒத்துப் போய் உள்ளது. நோக்கியாவின் பேட்டரி ஜி.எஸ்.எம் வகை தொடர்புகளில் ஒன்பது மணி நேரம் இயங்குகிறது. எச்.எஸ்.டி.பி.ஏ. எனில் ஐந்து மணி நேரமும், மியூசிக் இசைப்பது எனில் 35 மணி நேரமும் வீடியோ பார்ப்பது எனில் 3 மணி நேரமும் தாக்குப் பிடிக்கிறது. எந்த பயன்பாட்டில் இல்லை என்றால் இது 17 நாட்களுக்கு அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐ போன் 3ஜி பயன்பாடு எனில் 300 நிமிடங்கள் பேசலாம் என்றும் 2ஜி பயன்பாடு எனில் 600 நிமிடங்கள் பேசலாம் என்றும் இயங் காத போது 300 மணி நேரம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
புளுடூத் ஸ்டீரியோ: நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனை ஸ்டீரியோ புளுடூத் வசதியுடன் இணைந்து செயல்பட வைக்கலாம். கார்களிலும் இதே வகையில் இணைக்கலாம். ஆனால் ஆப்பிள் ஐபோனை இவ்வாறு பயன்படுத்த முடியாது. புளுடூத் இணைப்பில் ஏ2டிபி வசதியை ஐ போனில் ஏற்படுத்த முடியாது. மேலும் புளு டூத் வழியாக ஐபோனில் எம்பி3 உள்பட பைல்களைப் பங்கிடும் வசதி இல்லை.
மெசெஜிங்: ஐ போனில் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். மெசேஜ்களை பார்வேர்ட் செய்திட முடியாது. அது போல தடை எதனையும் நோக்கியா தரவில்லை. நோக்கியாவில் எஸ்.எம்.எஸ். செய்திகளை மொத்தமாக அழிக்க முடியும். மெசேஜ் சைஸ் 600 கேபி வரை அனுமதிக்கப்படுகிறது. எம்.எம்.எஸ். செய் திகள் தானாக ரீ சைஸ் செய்யப்படுகின்றன.
அடோப் பிளாஷ்: பத்திரிக்கை செய்திகளில் வந்த தகவல்களின்படி அடோப் நிறுவனம் ஆப்பிள் ஐ போனுக்கான பிளாஷ் தொகுப்பு ஒன்றை விரைவில் தர இருக்கிறது. அது கிடைக்கும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால் நோக்கியா 5800 வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே இதில் அடோப் பிளாஷ் சப்போர்ட் தரப்பட்டிருக்கிறது. ஆன்லைன் வசதி உள்ளதனால் பல இணைய தள விஷயங்களைப் பெற்றுக் காண பிளாஷ் தேவையாய் உள்ளது. இது இல்லை என்றால் அந்த இடங்களில் வெற்று இடங்கள் தெரியவரும். மேலும் ஐபோனில் பிளாஷ் பயன்படுத்தினால் பிரவுசிங் தாமதமாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆனால் ஐ போனில் தேர்ந்தெடுத்து தரப்படும் யு-ட்யூப் வீடியோக்களை ரசிக்கலாம்.
விலை: ஆப்பிள் ஐ போன் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் வழியாக மட்டும் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி விலை ரூ. 31,000 மற்றும் 16ஜிபி விலை ரூ. 36,000. இந்த வகையிலும் நோக்கியா இதற்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டச்/கீ போர்டு: நோக்கியா தகவல்களை உள்ளீடு செய்வதற்கு பல வழிகளைக் கொண்டுள்ளது. ஸ்டைலஸ் கொண்டு கையால் எழுதுதல், ஸ்டைலஸ் கொண்டு எழுதக் கூடிய சிறிய குவெர்ட்டி கீ போர்டு, முழுத் திரையிலான குவெர்ட்டி கீ போர்டு, எண்களும் எழுத்துக்களும் இணைந்த கீ போர்டு எனப் பல வசதிகள் உள்ளன. ஆப்பிள் ஐ போனில் ஸ்டைலஸ் இல்லை. ஆனால் தனியே வாங்கி இணைத்துக் கொள்ளலாம். மேலும் எழுத்து எண் இணைந்த கீ போர்டு மற்றும் லேண்ட்ஸ்கேப் கீ போர்டு இதில் தரப்படவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment