தொடர்ந்து இன்டர்நெட் பயனாளர்களின் ஆதரவினைப் பெற்று வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பிற்கு, ஆட் ஆன் தொகுப்புகளும் அன்றாடம் உருவாக்கப்பட்டு பல இணைய தளங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பயர்பாக்ஸ் பிரவுசரின் சிறப்பே அதுதான். பிரவுசர் தொகுப்பு எழுதப்பட்ட சோர்ஸ் கோட் எனப்படும் குறியீட்டு மொழி வரிகள் அனைவருக்கும் தெரியும் வகையில் தரப்படுவதால், உலகெங்கும் பல வல்லுநர்கள் இதற்கான ஆட் – ஆன் எனப்படும் கூடுதல் தொகுப்புகளை வழங்கி வருகின்றனர். அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் உள்ள டேப்களைத் தற்காலிகமாக மறைய வைத்திடும் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக கேம்ஸ் விளையாட நேரிடுகையில் தளத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கென தரப்பட்டால் மகிழ்ச்சி அடைவோம். இதற்காக மேலாக உள்ள டேப் வரிசையினைத் தற்காலிகமாக நாம் ஆட் ஆன் தொகுப்பு கொண்டு மறைத்திடலாம். இதற்கு Hide Tab bar extension என்று பெயர். இதனை முதலில்https://addons.mozilla.org/enUS/firefox/addon/12716 என்ற தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்தவா� ற இந்த தளத்திற்குச் செல்லவும். பின் "Add to Firefox" என்ற பட்டனில் அழுத்தவும். உடன் சாப்ட்வேர் இன்ஸ்டலஷேன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் "Install Now" என்ற பட்டனை அழுத்தவும். பின் இந்த ஆட் ஆன் தொகுப்பு இன்ஸ்டால் ஆகும். இது இன்ஸ்டால் ஆனவுடன் "Restart Firefox" என்ற பட்டனை அழுத்தவும். பயர்பாக்ஸ் ரீஸ்டார்ட் ஆனவுடன் கண்ட்ரோல் + எப்11 கீகளை அழுத்தவும். இப்போது டேப் பார் காட்டப்படும்; பின் மறைக்கப்படும். எனவே இது ஒரு டாகிள் பட்டன் போலச் செயல்படும். இதற்குப் பதிலாக "Addons"டயலாக் பாக்ஸ் வழியாகவும் செல்லலாம். இதில் Hide Tabbar என்ற ஆப்ஷன் கிடைக்கும். இதில் குறிப்பிட்ட விநாடிகள் காட்சி அளித்தவுடன் டேப் பாரை மறைக்கும்படியான ஆப்ஷன், டேப் பாரைக் காட்டி மறைக்க கீ தொகுப்பு அமைத்தல் மற்றும் பயர்பாக்ஸ் கீ போர்ட் செட்டிங்கையும் மீறி இந்த கீ போர்டு செட்டிங்ஸ் செயல்படல் என மூன்று வகையான ஆப்ஷன்கள் கிடைப்பதனைப் பார்க்கலாம். இந்த ஆப்ஷன் வேண்டாம் என்றாலும் இவ்வாறு இன்ஸ்டால் செய்ததை நீக்கிவிடலாம். இதற்கு ஆட் ஆன் டயலாக் பாக்ஸ் பெற்று அதில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியலைப் பெற்று நீக்கிவிடலாம்.
பயர்பாக்ஸில் டேப்களை மறைத்திட
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment