இந்திய மொபைல் சேவையில் அதிரடி மாற்றங்கள் வர இருப்பதால், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.
முதலாவதாக எந்த சர்வீஸ் புரவைடர் கொடுத்த எண்ணையும் இன்னொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்ற மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி வசதி விரைவில் வர இருக்கிறது.
தங்கள் எண் பலருக்குத் தெரிந்து, தம்மை அடையாளம் காட்டும் எண்ணாக இருப்பதாலேயே, நம்மில் பலரும் மொபைல் சர்வீஸ் மோசமாக இருந்தாலும், வேறு எண்ணுக்கு மாறாமலேயே இருக்கிறோம். இந்த வசதி வந்துவிட்டால், அதற்கு எவ்வளவு கட்டணமாக இருந்தாலும், பலர் தங்கள் மொபைல் சேவை நிறுவனத்தினை மாற்றிக் கொள்வார்கள்.
எனவே அடுத்து வரும் மாதங்களில், இந்த நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிவதைக் காட்டிலும், இருக்கிற வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதில் தான் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
3ஜி வருவதால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தலாம். 2ஜி சேவையில் இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த இயலா நிலை உள்ளது. ஆனால் பில்லிங் பணிகளுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைப் பயன்படுத்தும் வகையில் இதுவரை எந்த திட்டமும் உருவாக்கப் படவில்லை.
இதற்குத் தற்போது கிடைக்கும் இன்டர்நெட் அடிப்படைக் கட்டமைப்பினை நன்கு பயன்படுத்தும் வகையில் திட்டம் அமைக்கப்பட வேண்டும். தற்போது புழக்கத்தில் இருக்கும் மொபைல் போன்கள் மற்றும் 2ஜி அலைவரிசைக்கு இது இணைவாக இருக்காது.
3ஜி மற்றும் மொபைல் எண் போர்ட்டபிளிட்டி வந்த பின்னர், கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் பில்லிங் இருப்பதே சிறப்பாகவும் பயனுள்ள முறையிலும் இருக்கும் என்பதால், மொபைல் சேவை நிறுவனங்கள் அனைத்துமே புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
அத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களையும் தங்களு டன் தக்க வைத்திட பெரும் முயற்சிகளையும் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
0 comments :
Post a Comment