சொல்ல சொல்ல இனிக்கும் - சினிமா விமர்சனம்
நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுபவர் நவ்தீப். வெளியூரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வரும் சாரா மேல் பிரியம் வருகிறது. இருவரும் நட்பாக பழகுகிறார்கள். நவ்தீப் ஒருதலையாய் காதலிக்கிறார். சாராவோ காதலை ஏற்க மறுத்து ஊருக்கு போய் விடுகிறார்.
பிறகு ஓட்டலில் ஆடும் சுஜாவிடம் பழகி காதல் வயப்படுகிறார். அதுவும் முறிகிறது. ஓட்டல் நடத்தும் மதுமீதாவை காதலிக்கிறார். மதுவோ நப்தீப் பின் நண்பரை விரும்புவதாக சொல்கிறார். வெறுத்து போகும் நவ்தீப் வெளிநாடு போக தயாராகிறார்.
அப்போது பாங்கியில் வேலை பார்க்கும் மல்லிகா கபூர் மனதை பறிக்கிறார். அவர் பின்னால் சுற்றி காதல் கணை ஏவுகிறார். ஒரு கட்டத்தில் மல்லிகாகபூரும் காதலை ஏற்கிறார்.
இந்த நிலையில் நவ்தீப் நண்பன் அபிநய் மதுமிதாவை கர்ப்பமாக்கி விட்டு கை கழுவ முயற்சிக்கிறார். மதுமீதாவால் நவ்தீப்பை தவறாக புரிகிறார் மல்லிகாகபூர். காதலையும் முறிக்கிறார்.
காதல் தோற்ற நிலையிலும் நண்பனுக்கும் மதுமீதாவுக்கும் திருமணம் செய்து வைக்க போராடுகிறார் நவ்தீப். அதில் வென்றாரா என்பது கிளைமாக்ஸ்...
தொடர் காதல் தோல்வியில் வெதும்பும் இளைஞன் பாத்திரத்தில் நவ்தீப் வருகிறார்.,சாரா, சுஜா காதல் சுற்றல்கள் மேம்போக்காக இருந்தாலும் மதுமிதாவை காதலித்து தோற்கையில் வலி ஏற்படுத்துகிறார்.
நண்பனால் மோசம் போன மதுமிதாவை அவரோடு சேர்த்து வைக்க முயற்சிப்பது அழுத்தம்...
கழுத்தில் மாலையை போட்டு எது கேட்டாலும் செய்து கொடுக்கும் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வெளுக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரை வைத்து கர்ப்பமான மதுமிதாவை அபிநய் விரட்டத்துணிவதும் மதுமீதாவுக்கு நவ்தீப் ஆதரவாக களம் இங்குவதும் பரபரப்பு. இறுதியில் பிரகாஷ்ராஜுக்கு மாலை போட்டு தனக்கு ஆதுரவாக திருப்பும் நவ்தீப் தந்திரம் கைதட்டல்.
பிரகாஷ்ராஜும் போலீஸ் அதிகாரியாக வரும் ஆஷிஷ் வித்யாத்தியும் நெருப்பு பார்வை பறிமாறுவதில் ஏதோ நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு கடைசியில் எதுவும் இல்லாமல் போவது ஏமாற்றம்.
மதுமிதாவை ஏமாற்றி விட்டு தப்பும் அபிநய் வில்லத்தனம் எதிர்பாராதது. நப்தீப் நல்ல குணத்தில் ஈர்ப்பாகும் மதுமீதா திடீரென்று அபிநய்யை விரும்புவதாக சொல்வது ஓட்டவில்லை. சார்லி, சத்யன் சிரிக்க வைக்கின்றனர்.
பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமை. இளஞ்ஜோடிகளின் வாழ்வியலை ஜாலியாக படமாக்கியுள்ளார் இயக்குனர் முரளி அப்பாஸ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment