மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், நேற்று முன்தினம், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்கள், வேலைக்கு திரும்ப வேண்டும்; இல்லையென்றால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, ஏர்-இந்தியா நிர்வாகத்திற்கு, முழு அதிகாரம் உண்டு' என, தெரிவித்தார்.ஏர்-இந்தியா நிறுவன எக்சிகியூட்டிவ் பைலட்களின் வேலை நிறுத்தத்தால் நிலவும் சூழ்நிலைகள் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், விமான போக்குவரத்துத் துறை செயலர் மாதவன் நம்பியார் மற்றும் ஜாதவ் ஆகியோருடன் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.கடந்த சில நாட்களாக நடந்த பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக் கிடப்பட்டுள்ளது.
ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக் வாபஸ்
ஏர்-இந்தியா நிறுவன பைலட்களின் வேலை நிறுத்தம் நேற்று முடிந்தது. இன்று முதல் சர்வீஸ் படிப்படியாக சீராகும். இனி டிக்கெட் புக்கிங் தொடரும்.
முதலில் வெளிநாட்டு சர்வீஸ்கள் அனைத்தும் சீராகும் என்று கூறப் பட்டது.ஊக்கத் தொகை குறைப்பை உடனடியாக அமல்படுத்துவதில்லை என, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்ததால், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாக, பைலட்கள் நேற்று அறிவித்தனர்.
ஏர்-இந்தியா விமான நிறுவனம், தன் எக்சிகியூடிவ் பைலட்களுக்கு வழங்கும், உற்பத்தித் திறன் சார்ந்த ஊக்கத் தொகையை, 50 சதவீதம் அளவுக்கு குறைத்தது. இதை எதிர்த்து, ஏர்-இந்தியா நிறுவன பைலட்கள் 200 பேர் வரை, கடந்த சனிக்கிழமை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, ஏர்-இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பைலட்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந் தன. இதில், எவ்வித பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், பைலட்களுக்கான ஊக்கத் தொகை குறைப்பை, உடனடியாக அமல்படுத்தவில்லை என, உறுதியளித்ததைத் தொடர்ந்து, பைலட்களின் வேலை நிறுத்த போராட்டம், நேற்று கைவிடப்பட்டது.
இதை டில்லி, பாலம் விமான நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்களின் பிரதிநிதி கேப்டன் வி.கே.பல்லா நேற்று அறிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதியளித்ததன் பேரில், எங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்படுகிறது. இந்த போராட்டத்தால், பயணிகளுக்கு ஏற் பட்ட அசவுகரியங்களுக்கு, மன்னிப்பு கோருகிறோம்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, தீர்வு கண்டதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பைலட்களும், உடனடியாக வேலைக்கு திரும்புவர்.
பைலட்களின் குறைகள் தீர்க்கப்படுவதோடு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையில், 50 சதவீதம் குறைப்பு மற்றும் மூன்று மாதங்களுக்கான பிளையிங் அலவன்சு ஆகியவை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் பிரபுல் படேல் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர், அரசின் பிரதிநிதி; எனவே, அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.தற்போது நாங்கள், நிர்வாகத்துடன் முழு ஒத்துழைப்புடன் பணியாற்றுவோம். சமீபத்தில் ஸ்ரீநகரில் நடந்த கோல்ப் டோர்னமென்ட்டிற்கு ஸ்பான்சர் செய்தது போன்ற வீண் செலவுகளை நிர்வாகம் குறைக்கலாம்.இவ்வாறு பல்லா கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment