சர் சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் வரிசையில் சிதம்பரத்தை சேர்ந்த விஞ்ஞானி வெங்கட்ராம் ராமகிருஷ்ணனும் இடம்பெறுகிறார்.
இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் அரிதாகவே நோபல் பரிசு பெற்று வரும் வேளையில், ராமகிஷ்ணன் பரிசு பெற்றிருப்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை.
நீர் மற்றும் காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுருவும் போது ஒளிச்சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது.
இதை கண்டறிந்த ராமன் பெயரால் ராமன் விளைவு என்று அழைக்கப்படுகிறது.நோபல் பரிசு விழாவுக்குப் பின்னர், மது விருந்துக்கு ராமனை அழைத்தார்கள் ஆனால் அவர், ""ராமன் விளைவை ஆல்கஹாலில் கூட பார்க்க முடியும்.
ஆனால் ஆல்கஹால் விளைவை ராமனிடம் பார்க்க முயற்சிக்க வேண்டாம்'' என்று கூறி மறுத்துவிட்டார். சுப்ரமணியம்சந்திரசேகர்இயற்பியல் 1983சுதந்திரத்துக்கு முன் 1910 அக்.19ல் லாகூரில் பிறந்தவர் சுப்ரமணியம் சந்திரசேகர். நிதித்துறையில் பணியாற்றிய இவரது தந்தைக்கு 1918ல் சென்னைக்கு மாறுதல் கிடைத்தது.
சென்னையில்மாநிலக்கல்லூரியில் படித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கும் போது ஒரு போட்டியில் அவருக்கு விண் மீன்களின் உள்ளமைப்பு எனும் புத்தகம் பரிசளிக்கப் பட்டது. அதை ஆழமாக படித்த அவருக்கு விண்மீன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது.
பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1933ல் டாக்டர் பட்டம் பெற்ற சந்திரசேகர், அவருக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகத்தின் ஆசிரியரான எடிங்டனின் நட்பை பெற்றார். அதன்பின்னர் அமெரிக்கா சென்ற அவர் ஆராய்ச்சியை தொடர்ந்தார். "சந்திரசேகர் லிமிட்' எனும் வரையறையை அளித்தார். அவர்தான் நட்சத்திரங்களின் வாழ்நாள் எவ்வளவு என்பதை கண்டுபிடித்தார்.
அவர் கருத்துப் படி நமது சூரியன் ஆயிரம் கோடி ஆண்டுகள் வரை ஒளிரும். சர் சி.வி. ராமன் சந்திரசேகரின் பெரியப்பா ஆவார்.பெருமைமிகு இந்தியர்கள்ரவீந்திரநாத் தாகூர், சர் சி.வி.ராமன், ஹர்கோபிந்த் கொரானா, அன்னை தெரசா, சுப்ரமணியம் சந்திரசேகர், அமர்த்தியா சென், நைபால் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய எட்டுப் பேர்தான் நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்.
இவர்களில் இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்: ஹர்கோபிந்த் கொரானா, சுப்ரமணியம் சந்திரசேகர், வெங்கட்ராமன்ராமகிருஷ்ணன். வெளிநாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்றவர்: அன்னை தெரசா இந்திய வம்சாவளியினர்:
வி.எஸ்.நைபால்.நிறுவனம் சார்பில் நோபல் பரிசு பெற்றவர்: ராஜேந்திர பச்சோரி (நோபல் பரிசு இவருக்கு அல்ல) தாகூர், சர் சி.வி.ராமன், அமர்த்தியா சென் மற்றும் அன்னை தெரசா ஆகியோர்தான் நோபல் பரிசு பெற்ற போது இந்திய குடியுரிமை பெற்றிருந்தவர்கள்.
தாகூர், தெரசா மற்றும் அமர்த்தியா சென் ஆகிய மூவரும் மே.வங்கமாநிலத்தை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு தம்பதிகளுக்கு இந்தியாவில் பிறந்தநோபல் அறிஞர்கள்: பிரிட்டிஷ் ஜெனரலுக்கு மகனாக 1857ல் அல்மோரா நகரில் பிறந்த, ரொனால்டு ரோஸ் 1902ல் மருத்துவத்துக்கான நோபல் பெற்றார். பிரிட்டிஷ் தம்பதியினருக்கு 1865ல் மும்பையில் பிறந்த ருட்யார்ட் கிப்ளிங் 1907ல் இலக்கிய நோபலை வென்றார்.
இதனால் வருத்தப்பட்ட நோபல், "டைனமைட்' கண்டுபிடிப்பால் கிடைத்த வருமானத்தை, எதிர்காலத்தில் பல்வேறு துறை அறிஞர்களுக்கு பரிசாக வழங்கவேண்டும் என்று உயில் எழுதினார்.
நோபல் பரிசு 1901ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகியபிரிவுகளில் சாதனையாளர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டுகவுரவிக்கப்படுகின்றனர்.
அமைதிக்கான நோபல் பரிசை தவிர பிறபரிசுகள் ஆல்பிரட் நோபல் மறைந்த தினமான டிசம்பர் 10ம் தேதி வழங்கப்படுகின்றன. இன்று உலகின் மிக உயரிய கவுரவமாக நோபல் பரிசே கருதப்படுகிறது.
நோபல் பரிசின் இன்றைய மதிப்பு 6 கோடியே 64 லட்சம் ரூபாய். இந்த ஆண்டு வேதியல் நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப் பட்டுள்ளதால் ஒவ்வொருவருக்கும் சுமார் 2 கோடியே 21 லட்ச ரூபாய் கிடைக்கும். வேதியியல் நோபல் பரிசுகளை இதற்கு முன்,புகழ்பெற்ற சர் வில்லியம் ராம்சே (1904),இயர்ன்ஸ்ட் ரூதர் போர்ட் (1908), மேரிகியூரி (1911) உள்ளிட்டோர் வென்றுள்ளனர்.
இந்த ஆண்டு நோபல் பரிசை வென்றதன்மூலமாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் இந்த சாதனையாளர் வரிசையில் இடம்பெறுகிறார். இந்தியாவை சேர்ந்த யாரும் இதற்கு முன்வேதியியல் நோபல் வென்றது இல்லை
0 comments :
Post a Comment