திருடிய பணத்தில் ஒருபங்கை, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத் திய திருடனை காட்டிக்கொடுத்து விட்டார் கடவுள். என்னது, கடவுள் காட்டிக் கொடுத்தாரா என்று நீங்கள் சந்தேகிக்க வேண்டாம்; உண்மையில் நடந்த சம் பவம் இது. பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரை சேர்ந்தவன் ஹித்தேஷ் சர்மா; கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து ஸ்டேட் பாங்க் கிளையில் பல லட்சம் கொள்ளையடித்தான். கொள்ளை அடித்த பணத்தில் 10 சதவீத தொகையை உள்ளூர் காளி கோவிலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன்படி, வங்கியில் கொள்ளையடித்த பணத்தில், மூன்றரை லட்சத்தை காளி கோவில் உண்டியலில் செலுத்த சர்மா முடிவு செய்தான். அதன்படி, சர்மா வெள்ளை நிற குர்தா, பைஜாமா அணிந்து கொண்டு, பணத்துடன் கோவிலுக்கு சென்றான்; அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணத்தை போட்டான். பணக் கட்டுகளை உண்டியலில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டான்; கட்டுக்களை போடுவதை பார்த்த மற்ற பக்தர்கள் வியப்படைந்தனர். இவனது பெருந்தன்மையை புகழ்ந்து பூசாரிகள் மந்திரங்கள் ஓதினர். இந்த புகழ் மழையில் நனைந்த சர்மா, உண்டியல் இருந்த அறையில் மேலே சுழன்று கொண்டிருந்த சி.சி.டி.வி.,கேமராவை கவனிக்கவில்லை. காணிக்கை செலுத்தும் போது அவன் பல கோணங்களில் கேமராவால் படம்பிடிக்கப்பட்டான். கேமரா பதிவுகளை இன்னொரு அறையில் இருந்து கண்காணித்து வந்த போலீசார் உடனே உஷாராயினர். அவனை பின் தொடர்ந்து மடக்கிப்பிடித்து சிறையில் அடைத்தனர். அவனிடம் விசாரணை செய்ததை அடுத்து, மற்ற ஆறு பேரையும் கைது செய்தனர். வீடியோ கேமரா ஆதாரங்களை கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். காணிக்கை பணத்தை திருப்பி ஒப்படைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது
காணிக்கை போட்ட திருடன்: காட்டிக்கொடுத்தார் கடவுள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment