இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகமாக அறிவிக்கப்பட்டுத் தற்போது மார்க்கட்டிற்கு வந்துள்ள பல மொபைல்களில் மக்கள் விரும்பிப் பார்க்கும் சில மொபைல்கள் குறித்த தகவல்களை இங்கு காணலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இ.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகளை இதில் மேற்கொள்ளலாம். ஆர்.டி.எஸ். இணைந்த எப்.எம். ரேடியோ இசைக்கு இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது. நான்கு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. ட்ராக் ஐ.டி., பிக்சர் எடிட்டர், ஆர்கனைசர், வாய்ஸ் மெமோ ஆகியவை இதில் உள்ள கூடுதல் வசதிகளாகும். இதன் பேட்டரி தொடர்ந்து 12 மணி நேரம் இசையை வழங்கக் கூடியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 7,211
சந்தையில் சந்தித்த புது மொபைல்கள்
சாம்சங் சி 3010:
குறைந்த விலையில் கிடைக்கும் நல்லதொரு மல்ட்டி மீடியா போனாக சாம்சங் சி 3010 வந்துள்ளது. மூன்று பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனில் 2 அங்குல வண்ணத்திரை அழகாகப் பளிச்சிடுகிறது. விஜிஏ கேமரா சிறந்த படங்களைத் தருவதுடன், விநாடிக்கு 15 பிரேம் வீடியோ காட்சிகளை எடுக்கிறது. ஆர்.டி.எஸ். வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, எம்பி3/எம்பி4 பிளேயர், வாய்ஸ் மெமோ, புளுடூத், மொபைல் ட்ரேக்கர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ஆகிய வசதிகளுடன் எந்நேரமும் பொழுது போக்கிற்கான சிறந்த மல்ட்டிமீடியா போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 1000 முகவரிகள் கொள்ளும் அட்ரஸ் புக் தரப்பட்டுள்ளது. உள் நினைவகம் 15 எம்.பி; மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தி 8 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 12.1 மிமீ தடிமனில் 66 கிராம் எடையில் உள்ள இந்த போனை மிக எளிதாகக் கையாள முடிகிறது. இதன் விலை ரூ.3,365 எனக் குறியிடப்பட்டுள்ளது.
சோனி எரிக்சன் எஸ் 312:
சென்ற ஜூன் மாதம் மார்க்கட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இப்போதுதான் கடைகள் எங்கும் பரவலாகக் கிடைக்கிறது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கக் கூடிய இந்த போனில் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா, 176 x 220 பிக்ஸெல்லில் அமைந்த, ஸ்கிராட்ச் தடுக்கும் 2 அங்குல வண்ணத்திரை, 1000 முகவரிகள் கொள்ளும் அட்ரஸ் புக், 15 எம்பி உள் நினைவகம், 4ஜிபி வரை நீட்டிக்கும் வசதி, நெட்வொர்க் இணைப்பு, அ2ஈக இணைந்த புளுடூத், யு.எஸ்.பி. போர்ட், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., வாப் பிரவுசர், ஆர்.டி.எஸ். கொண்ட எப்.எம். ரேடியோ, எம்பி3/4 பிளேயர், 8 மணி நேரம் பேச வசதி தரும் பேட்டரி எனப் பல வசதிகள் கொண்டு 12.5 மிமீ தடிமனுடன் 81 கிராம் எடையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போன் ரூ. 5,385 என விலையிடப்பட்டுள்ளது.
சோனி டபிள்யூ 395:
நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கக் கூடிய இந்த போன் சென்ற மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் சந்தையில் விருப்பமான ஒரு மொபைல் போனாக வலம் வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த மொபைல் 96 கிராம் எடையில் ஒரு வாக்மேனாக உலா வருகிறது. இசையை ரசிக்க ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. இதன் நினைவகம் 10 எம்பி. ஒரு ஜிபி கார்ட் தரப்படுகிறது. இதனை 4 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளலாம். அ2ஈக இணைந்த புளுடூத், ஜி.பி. ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்ப வசதிகள் உள்ளன. 2 எம்பி திறன் கொண்ட கேமரா படங்களையும் வீடியோ கிளிப்களையும் சிறப்பான வகையில் தருகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment