தேடுபொறி எனப்படும் "சர்ச் என்ஜின்"களில் முன்னணியில் இருப்பது கூகுள்.இதற்கு அடுத்தபடியாக யாஹூ உள்ளது.மூன்றாவது இடத்தில மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ச் என்ஜின் இருக்கிறது.கணக்கெடுப்பு ஒன்றின் படி கூகுள் தேடுபொறியை 64.2 சதவீதம் பேரும்,யாஹூ தேடுபொறியை 20.4 சதவீதம் பேரும்,மைக்ரோசாப்ட் தேடுபொறியை 8.2 சதவீதம் பேரும் பயன்படுத்துகிறார்கள்.
மென்பொருள் தயாரிப்பில் கொடிகட்டி பறந்தாலும் தேடுபொறி பயன்பாட்டில் பின்தங்கி இருக்கும் நிலையை மாற்ற மைக்ரோசாப்ட் முயற்சிகள் செய்தது.இதையொட்டி புதிய தேடுபொறி எந்திரம் ஒன்றை உருவாக்க தனது ஆய்வாளர்களை மைக்ரோசாப்ட் முடுக்கி விட்டது.கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஆய்வின் முடிவில் "பிங்க்" என்ற பெயரில் புதிய தேடுபொறி எந்திரத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி இருக்கிறது.
புதிய தேடுபொறியின் "பீடா" எனப்படும் சோதனை வடிவம் கடந்த வாரம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது.படிப்படியாக உலகின் மற்ற நாடுகளிலும் பிங்க் பீடா வடிவம் வெளியாக உள்ளது.மற்ற தேடுபொறியில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.சோதனை வடிவத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் தரும் விமர்சனங்கள்,ஆலோசனைகள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவம் வெளியிட உள்ளனர்.மேலும் இதை விளம்பரப்படுத்த 100 மில்லியன் டாலர்(சுமார் 400 கோடி ரூபாய்)செலவு செய்யவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.தேடுபொறி பிங்க் குறித்த தகவல்களை அறிய www.bing.com என்ற இணையதளத்தை காணலாம்.
0 comments :
Post a Comment