டிசைனர் பர்னிச்சர்: விப்ரோ அறிமுகம்
விப்ரோ நிறுவனம் அலுவலகங்களுக்கு ஏற்ற புதிய ரக பர்னிச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர் டிம் வாலஸýடன் ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய ரக தயாரிப்புகள் "ஸ்டார்லைன்' என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும்.
பெருநகரங்களில் இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் பராக் குல்கர்னி தெரிவித்தார்.
புதிய தயாரிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: அலுவலக பர்னிச்சர்களின் விற்பனைச் சந்தை ரூ. 1,100 கோடியிலிருந்து ரூ. 2,000 கோடியாக உள்ளது.
இதில் உயர் ரக பர்னிச்சர்களின் சந்தை ரூ. 500 கோடியாகும். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பர்னிச்சர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விப்ரோ நிறுவனம் தற்போது உயர் ரக, அதிநேர்த்தியான பர்னிச்சர்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் நிறுவனம் அல்லது வடிவமைப்பாளருடன் ஒப்பந்தம் செய்து புதிய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முதல் முறையாக லண்டனைச் சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர் டிம் வாலஸýடன் விப்ரோ இணைந்துள்ளது. இதன் மூலம் புதிய ரக தயாரிப்புகள் ஸ்டார் லைன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்துக்கு ஒüரங்காபாத்தில் ஒரு நவீன ஆலை உள்ளது. சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆலை நாற்காலிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
நாற்காலிகள் தயாரிப்பில் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல வடிவமைப்பாளருடன் ஒப்பந்தம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
விப்ரோ நுகர்வோர் விற்பனைப் பொருள் நிறுவனங்களில் பர்னிச்சர் விற்பனை துறையின் பங்களிப்பு 10 சதவீதமாகும். இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment