கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் அடிக்கடி கேள்விப்படும் மற்றும் பயன்படுத்தும் சில சொற்றொடர்கள் இங்கு விளக்கத்துடன் தரப்படுகின்றன. Attachment: இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல்.இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.படங்கள்,பாடல்கள்,எம்.எஸ்.ஆபீஸ் பைல்கள்,சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஒரு சில இமெயில் கிளையன்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மென்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன.மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்புகையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுன்லோடு செய்திடும் நேரமும் அதிகமாகும். Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது.இது தேட்ட பயணிக்கும் வேகத்தை குறிப்பது அல்ல. Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யுட்டரும் கிளையன்ட் என அழைக்கப்படும். Desktop: மானிட்டர் திரையில் பைல்களையும் ,ஐகான்களையும் படங்களாக காட்டும் இடம்.இதனைக் கொண்டுதான் மேஜையில் வைத்து இயக்கப்படும் கம்ப்யூட்டரை "Desktop computer" என அழைக்கின்றனர். Domain Name: இண்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Firewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட) கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதி இன்றி வரும் அடுத்தவரின் முயற்சியை தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.
0 comments :
Post a Comment