மின்னஞ்சல் உட்பட பல்வேறு இணையதள சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் கூகுள் வெளியிட இருக்கும் புதிய மென்பொருள் 'கூகுள் வேவ்'.தற்போது இதன் மாதிரி வடிவம் வெளியாகி இருக்கிறது.
'சுவிஸ் நைப்' என்ற பெயரில் உள்ள கத்தியைப் பற்றி அறிந்து இருக்கலாம்.இது பல்வேறு கத்திகள் மற்றும் பயன்பாட்டு கருவிகளின் தொகுப்பாகும்.இந்த ஒரு கத்தி தொகுப்பைப் பயன்படுத்தி நமக்குரிய பல்வேறு வேலைகளை செய்து முடிக்க முடியும்.அதாவது இந்த கத்தி தொகுப்பில் சிறிய கத்தி,சிறிய ரம்பம்,சிறிய ஸ்க்ரூ டிரைவர்,சிறிய ஸ்பேனர்,என்று ஏராளமான கருவிகள் இருக்கும்.அது போல பல்வேறு இணைய வசதிகள் கொண்ட புதிய மென்பொருள் வடிவம் தான் 'கூகுள் வேவ்'.
இந்த மென்பொருளின் மூலம் மின்னஞ்சல்,குறுந்தகவல் அனுப்பும் வசதி,சேட்டிங்,பிளாக்,மல்டிமீடியா வசதிகள்,தேடுபொறி வசதி,படங்கள் தேடும் வசதி,விக்கிபீடியா வசதி உட்பட பல்வேறு வசதிகளை நாம் பெற முடியும்.இதுதவிர நமது அலுவலகப் பணிகளுக்கான தகவல் தொடர்பு வசதிகளையும் இதன் மூலம் செய்து கொள்ள முடியும்.தற்போது சோதனை முறையில் உள்ள இந்த மென்பொருள் அடுத்த ஆண்டு பொதுமக்களின் உபயோகத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment