கொழுப்பைக் குறைக்கும் தேங்காய்!


தேங்காயில் உள்ள "பேட்டி ஆசிட் " (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.உடல் எடையைக் குறைகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

"தேங்காயில்,தேங்காய் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம்.அது உடலுக்கு ஆகாது.குறிப்பாக சர்க்கரை நோயாளிகள்,இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக் கூடாது" என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

"பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று தென்னையையும்,அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாய்ப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து.
சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.தென்னையில் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.

தேங்காய்,தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரச்சாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.தேங்காய்,தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.விருந்து,விழாக்கள்,பண்டிகைகள்,சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான்.

தேங்காய் மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல,மருத்துவத்தின் அடியாள் சின்னமும் கூட.இந்தியாவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் வயது எண்பது ஆண்டுகள் முதல் இருநூறு ஆண்டுகள் வரை.விதை வளர்ந்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை "தென்னம்பிள்ளை" என்று அழைக்கிறார்கள்.

தேங்காயில் உள்ள சத்துக்கள்
  • புரதச்சத்து
  • மாவுச்சத்து
  • கால்சியம்
  • பாஸ்பரஸ்
  • இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள்
  • வைட்டமின்
  • அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள்
  • நார்ச்சத்து
என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்கள்
தே ங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.தேனகாய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.தேமல்,படை,சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப் போக்குக்கு,தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.வெள்ளைப் படுதலுக்கு தென்னம் பூ மாருந்தாக பயன்படுத்தப்படுகிறது.தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கோடு பெருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes