கடந்த ஓராண்டு காலமாக குரோம் பிரவுசர் நமக்குக் கிடைத்து வருகிறது.செப்டம்பர் முதல் இதற்கான அப்டேட் பைலும் தரப்பட்டது.குரோம் வெளியாகிச் சில வாரங்களிலேயே அதன் 1.0 பதிப்பு மிகவும் ஸ்திரமானது என்று தரப்பட்டது.இப்போது அதன் பதிப்பு 2.0 பீட்டா பதிப்பு வெளியாகியுள்ளது.இந்த 2.0.181.1 Beta புதிய பதிப்பில் மேலும் வேகமாக குரோம் செயல்படக் கூடிய விஷயங்கள் தரப்பட்டுள்ளன.ஜாவா ஸ்கிரிப்ட் செயல்பட வேண்டிய இடங்களில் குறைந்தது 30% வேகம் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஆட்டோ பில்,முழுதிரை பயன்பாடு,புதிய டேப் ஸ்க்ரீனை வடிவமைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
குரோம் வெளியாகி அதன் வேகத்திற்கு பெயர் பெற்றாலும் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் இன்னும் அது நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தையே கொண்டுள்ளது.இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்,பயர்பாக்ஸ்,ஆப்பரா மற்றும் சபாரியை அடுத்தே இடம் பெறுகிறது.இருந்தாலும் குரோம் தான் இயங்கும் தன்மையைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது.குறிப்பாக இதன் வேகத்தை அதிகரிக்கும் பணியில் இது தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.
0 comments :
Post a Comment