பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் ஒன்றரை அடி நீளமுள்ள பாம்பு இருந்தது.உணவை சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் ,பிர்பும் மாவட்டம் கபிரஜ்பாராவில் உள்ள ஒரு பள்ளியில் ,குழந்தைகளுக்கு சத்துணவு தயாரிக்கப்பட்டது.
அந்த சத்துணவை தயாரிக்கும் போது ஒன்றரை அடி பாம்பு விழுந்து விட்டது.இதை கவனிக்காமல் ,குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.அப்போது உணவுடன் சேர்ந்து பாம்பும் வந்து விழுந்தது.இதைப் பார்த்த குழந்தைகள் அதிச்சி அடைந்தனர்.அவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டது.மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளும் ,உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.நல்ல வேலையாக உணவில் நச்சு எதுவும் இல்லை என பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் ,உணவில் நீளமான பாம்பை பார்த்த அதிர்ச்சியில் இருந்து பல குழந்தைகள் மீளவில்லை.இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.விசாரணையில் சத்துணவு தயாரித்த பெண் மீது குற்றம் நிரூபணமானால் ,நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்திற்கு மாயா கோனாய் தான் பொறுப்பு என்று கூறப்பட்டது.ஆனால்,இதை மாயா திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.மதிய உணவு தயாரிக்கப்படும் இடம் ,சிறிதும் பராமரிப்பு இல்லாதது குறித்தும் ,அங்கு பாம்பு,பல்லி இருப்பதாகவும் தொடர்ந்து புகார் கூறி வந்ததாகவும் ,இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவத்தார்.
தான் சமைக்கும் போது உணவில் பாம்பு விழுந்ததை பார்க்கவில்லை என்றும் ,உணவில் எப்படி பாம்பு வந்தது என்பது தெரியாது.என்றும் மாயா கூறியுள்ளார்.இது தொடர்பாக ,விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வாந்தி,மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மாலையிலேயே வீடு திரும்பினர்.
0 comments :
Post a Comment