சாம்சங் நிறுவனம் தன் நோட்புக் மற்றும் மினி நோட்புக் கம்ப்யூட்டர் வரிசையில் அண்மையில் மேலும் ஏழு புதிய நோட்புக் கம்ப்யூட்டர்களை வெளியிட்டுள்ளது.இவற்றில் என் சிரீஸ் வரிசையில் நான்கு ஸ்டைலான எடை குறைந்த மாடல்களும் ஆர் சிரீஸ் வரிசையில் மூன்று லேட்டஸ்ட் மாடல்களும் வெளியாகியுள்ளன.என் சிரீஸ் வரிசையில் N110,NC20,N120 மற்றும் N210 என்ற பெயர்களில் இவை கிடைக்கின்றன.இவற்றில் என்சி 20 தவிர மற்றவை இன்டல் ஆட்டம் ப்ராசசர்களில் இயங்குகின்றன.என் சி20 நானோ யு.எல்.வி. ப்ராசசரைப் பயன்படுத்துகிறது.இவை அனைத்திலும் 1 ஜிபி ராம் மெமரி தரப்பட்டுள்ளது.ஹார்ட் டிஸ்க் அளவு 160 ஜிபி 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.புளுடூத் வசதி உள்ளது.ஓராண்டு இண்டர்நேஷனல் வாரண்டி தரப்பட்டுள்ளது. என் 110 நோட்புக் கம்ப்யூட்டரின் விலை என் -ரூ 25252 மற்றும் என்.சி120 ரூ .26327,என்310 விலை இன்னும் திரியவில்லை.
சாம்சங் வெளியிட்ட புதிய நோட்புக் கம்ப்யூட்டர்கள்
ஆர் சீரிஸ் வரிசையில் R522,R470 மற்றும் R518 என்ற பெயரில் நோட்புக் கம்ப்யூட்டர்கள் வந்துள்ளன.இவற்றில் 2 ஜிபி ராம் மெமரி தரப்பட்டுள்ளது.1.3எம்.பி வெப் கேமரா இணைக்கப்பட்டுள்ளது.ஓர் ஆண்டு இன்டர்நேஷனல் வாரண்டி தரப்பட்டுள்ளது.15.6 அங்குல அகலமுள்ள இந்த நோட்புக் கம்ப்யூட்டரில் அலுமினிய ஸ்டைலில் கை வைத்து இயக்க இடம் தரப்பட்டுள்ளது.இதம் சிஸ்டம் வாட்டர் டைட்டாக சீல் செய்யப்பட்டுள்ளது.இதனால் 100 சிசி அளவு நீர் பட்டாலும் கீ போர்டு கெட்டுப் போகாது.இதில் 4 யு.எஸ்.பி.போர்டுகள் தரப்பட்டுள்ளன.இந்த எண்ணில் இரண்டு மாடல் நோட்புக் கம்ப்யூட்டர்கள் வந்துள்ளன.இவற்றின் விலை ரூ.37399 மற்றும் ரூ.41914 ஆகும். ஆர் 470 நோட்புக் கம்ப்யூட்டரில் இரண்டு யு.எஸ்.பி.போர்டுகள் உள்ளன.இதில் உள்ள யு.எஸ்.பி.போர்டில் மொபைல் போன்ற சாதனங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம்.இந்த நோட்புக் கம்ப்யூட்டரின் விலை ரூ.48364
ஆர் 518 நோட்புக் கம்ப்யூட்டரின் விலை ரூ.33637 நீர் பட்டாள் கெட்டுப் போகாத கீ போர்டு இதிலும் தரப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment