கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கீகளை மாற்றி அமைக்க முடியுமா?இந்த கேள்வி சற்று ஆபத்தானதுதான் என்றாலும் சிலருக்கு இந்த கட்டாயத் தேவை அவ்வப் போது ஏற்படத்தான் செய்கிறது.குறிப்பாக நாம் அதிகம் பயன்படுத்தும் கீகள் அருகே ஒரு சில கீகள் அமைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக வலது புறம் உள்ள விண்டோஸ் கீ மற்றும் அதன் அருகே உள்ள மெனு கீ ஆகியவற்றை கூறலாம்.பல வேளைகளில் இவற்றை அழுத்தி நாம் ஏமாறுவது உண்டு.அப்போது இந்த கீயை நாம் விரும்பும் கீயாக மாற்றி விடலாமே என்று கூட எண்ணுவோம்.
கம்ப்யூட்டர் விளையாட்டுகளை அதிகம் விளையாடுவோரும் இது போல விருப்பம் கொள்வார்கள்.விளையாட்டுகளில் சுடுதல்,பறத்தல் போன்ற செயல்களுக்கு சில கீகள் தரப்படும்.இவை ஒரு சிலருக்கு வாகாக இல்லை என்றல் மாற்றி அமைத்தால் என்ன என்று எதிர்பார்ப்பார்கள்.
குறிப்பாக விளையாட்டுகளில் பல பயன்பாடுகள் ஆல்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளிலும் ஸ்பேஸ் பாரிலும் ஒதுக்கப்படுகின்றன.அதனால் தான் பெரும்பாலும் இந்த கீகளுக்கு அருகே அமைந்துள்ளன.விண்டோஸ் கீயினால் விளையாட்டில் குறுக்கீடு ஏற்படுகிறது.இந்த கீயை முடமாக்க முடியுமா என்றும் பலர் விரும்புகின்றனர்.
விண்டோஸ் கீ பல பயன்பாடுகளுக்கு பக்க பலமாக உள்ளது.எனவே இதனை முட மாக்கக் கூடாது.வேண்டுமானால் அந்த கீயின் பயன் பாட்டினை வேறு ஒரு கீக்கு மாற்றலாம்.
அதாவது விண்டோஸ் கீயினை வேறு ஒரு கீயில் வைத்து விடலாம்.இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள உங்களுக்கு ஒரு சிறிய புரோகிராம் தேவைப்படும்.அந்த இலவச புரோகிராம் பெயர் KeyTweak என்பதாகும்.இந்த புரோகிராம் http://webpages.charter.net/krumsick என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.இதன் மூலம் உங்கள் கீ போர்டில் உள்ள கீகளை நீங்கள் விரும்பும்படி முற்றிலுமாக கூட மாற்றி அமைக்கலாம்.
முதலில் மேலே சொன்ன தளத்திற்கு சென்று Keyboard Remapper v2.3.0 என்ற புரோகிராமினை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யவும்.இது மிகவும் சிறிய,எளிய,முற்றிலும் இலவச புரோகிராம்.இதன் அளவு 281 கே.பி ஆகும்.
இன்ஸ்டால் செய்திட்ட பின் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ஆல் புரோகிராம்ஸ் என்பதனை கிளிக் செய்து இந்த புரோகிராம் இருப்பதனை பார்த்து இயக்கவும்.டெஸ்க் டாப்பில் இந்த புரோகிராமுக்கான ஐகான் பதியப்படாது என்பதால் இந்த வேலை .இந்த புரோகிராமினை இயக்கினால் கீ போர்டில் உள்ள கீகள் தெரியும். ஆனால் இவற்றில் எழுத்துகள் இருக்காது.அதற்க்கு பதிலாக எண்கள் இருக்கும்.கீ போர்டு அமைப்பை வைத்து நீங்கள் தான் எந்த கீக்கு எந்த எண் எனக் கண்டுபிடிக்க வேண்டும்.இதுவும் எளிதுதான்.உங்கள் மவுஸ் அந்த எண் அருகே சென்றால் அது எந்த கீகானது எனக் காட்டும்.
இடது புறம் இருக்கும் விண்டோஸ் கீயின் எண் 59.வலது புறம் உள்ள விண்டோஸ் கீயின் எண் 63 .இப்போது இடது புறம் இருக்கும் விண்டோஸ் கீயின் வலது கோடிக்கு ,எடுத்துக்காட்டாக மைனஸ் அடையாளம் உள்ள கீக்கு மாற்ற விரும்பினால் (இந்த கிதான் அதிகம் பயன்படாத கீ ஆகும்.)எனவே எண் 59 ஐ மைனஸ் கிக்கான 105 எண்ணாக மாற்றிவிடலாம்.இது போல எந்த கீக்கான பயன்பாட்டையும் வேறு ஒரு கீக்கு மாற்றி விடலாம்.