விபத்துக்குள்ளாகி அட்லாண்டிக் கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானத்தின் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தை தேடும் பணியில் பிரேசில், பிரான்ஸ் நாட்டு விமானப் படைகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.விபத்து நடந்த பகுதி ஆழமான கடல் பகுதி என்பதால் 11-க்கும் மேற்பட்ட விமானங்கள் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், விபத்து நடந்ததாக உணரப்பட்ட பகுதியின் 5 கி.மீ. பரப்புக்குள் விமானத்தின் பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு பாகம், 7 மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருந்ததாகவும், விமானத்தின் இருக்கைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment