கோவை வ.உ.சி. பூங்காவில் கடந்த ஜன.2, 3-ம் தேதிகளில் முதன்முறையாக ஹோட்டல்கள் சங்கம் நடத்திய உணவுத் திருவிழாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு.
சைவ, அசைவ, சைனீஸ், துரித உணவு என அனைத்து வகை உணவுகளும் ஒரே இடத்தில் சங்கமித்ததால் உணவுப் பிரியர்களுக்கு அதிக உற்சாகம்.
செட்டிநாடு, கொங்கு மண்டலம் என பல்வேறு வகையான சைவ உணவுகள், அதேபோல அசைவ உணவு வகைகள், பிரியாணி வகைகள், தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டை பரோட்டா, தோசை வகைகள், தந்தூரி, சில்லி சிக்கன், û.... என உணவு பிரியர்கள் திக்குமுக்காடிப் போயினர்.
பார்வையாளர்களை கவரும் வகையில் உணவுத் திருவிழாவில் பார்வைக்காக கலைநயமாக வடிவமைக்கப்பட்டிருந்தது 20 அடி நீள தோசை.
குஷிப்படுத்துவதற்காக மைதானத்தின் மையப் பகுதியில் கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள்,சமையல் கலை பற்றிய கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இதுதவிர குளிர்பானங்கள், பானிபூரி, பேல்பூரி, சுவீட், கார வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.
முன்னணி ஹோட்டல்களின் உணவுகள் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைத்ததால் உணவுப்பிரியர்களுக்கு ரொம்ப கொண்டாட்டம்தான். இரு நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment