ஐ.ஆர்.சி.டி.சி., (இந்தியன் ரயில்வே கேட்டரிங் அன்ட் டூரிசம் கார்ப்ரேஷன் லிமிடெட்) ஏர்லைன் டிக்கெட் சர்வீசை அறிமுகப் படுத்தும் திட்டத்தில் உள்ளது.
நாள் ஒன்றுக்கு சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில்வே டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையத்தளம் மூலம் பதிவு செய்யப் படுகிறது. தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் தனது சர்வீசை மேலும் அதிகரிக்கும் விதமாக, தனது ஆன்லைனிலேயே ஏர்லைன் டிக்கெட்டுகளையும் விற்பனை செய்யும் திட்டத்தில் உள்ளது.
இதற்காக, தனது வெப்சைட்டில் புதிய பக்கங்களை அறிமுகப் படுத்த உள்ளது. இந்த புதிய சர்வீஸ் மூலம், பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய இடங்களை எளிதாக அடையும் விதமாக எர்லைன் மற்றும் ரயில்வே டிக்கெட்டுகளை ஒரே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., மேலாண்மை இயக்குனர் ராஜேஸ் கூறும்போது, முக்கிய இடங்களுக்கு பயணிகள் செல்லும் போது, ரயில் மற்றும் ஏர்லைனில் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த இரண்டு டிக்கெட்டுகளையும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையத் தளத்தில் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்
0 comments :
Post a Comment