மொத்த இன்டர்நெட் தேடலில், மொபைல் போன் வழியாகத் தேடுவது இப்போது 1.3 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் இந்த தேடல் மிக அதிகமாக இருந்ததாக இவற்றைக் கவனித்து வரும் வெப் மெட்ரிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில், மொத்த இன்டர்நெட் பயன்பாட்டில் 0.57 சதவீதம் ஆக இருந்த மொபைல் வழித் தேடல் தற்போது 1.35 சதவீதம் டிசம்பரில் உயர்ந்தது. இதனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி தேடல் 99.28சதவீதம் லிருந்து 98.36% ஆகக் குறைந்தது.
மொபைல் வழி இன்டர்நெட் தேடலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு 58.4 சதவீதம். பிளாக்பெரி 22.2 சதவீதம், ஐபோன் 20.1சதவீதம், சிம்பியன் 19.01 சதவீதம் மற்றும் ஜாவா எம்.இ. 15.6 சதவீதம் ஆக இருந்தன.
கவனத்திற்கு....
எல்.சி.டி. LCD Liquid Crystal Display: குறைந்த மின் சக்தியில் குறைவான தடிமனில் இமேஜ்களைக் காட்டுவதற்கான டிஸ்பிளே தொழில் நுட்பம். டிஜிட்டல் வாட்ச் முதல் தட்டையான ஸ்கிரீன் மானிட்டர் மற்றும் எல்சிடி டிவிக்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
யு.எஸ்.பி. (USB) : வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம்
0 comments :
Post a Comment