கடந்த 2009ம் ஆண்டின் சிறந்த கார் தயாரிப்பாளர் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் நிறுனம் பெறுகிறது. இந்தியாவில் கார் தயாரிப்பில் மாருதி, டோயோட்டோ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முன்னணியில் உள்ளது டாடா மோட்டார்ஸ்.
இந்த நிறுவனம் சிறிய மற்றும் பெரிய வகை கார்களை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பான நானோ என்ற சிறிய ரக காருக்கு நல்ல மவுசு இருக்கிறது.
சிறந்த கார்களுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் டில்லியில் நடந்தது. டாடா தயாரிப்பான நானோ கார் தற்போது விற்பனையில் சக்கை போடு போடுகிறது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறைந்த விலை, சிறந்த வடிவமைப்பு, நல்ல தரம் ஆகியவற்றுக்காக நானோ காருக்கு 2009ம் ஆண்டுக்கான இடி- ஜிக் வீல்ஸ் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடாவின் இண்டிகோ மான்சா, பெரிய கார் வகையில், 2009ம் ஆண்டின் 'சிறந்த அறிமுக கார்' என்பதற்கான விருதை பெற்றுள்ளது.
மொத்தத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2009ம் ஆண்டுக்கான சிறந்த கார் தயாரிப்பாளர் விருதை பெற்றுள்ளது
0 comments :
Post a Comment