32 ஜிபி கொள்ளளவு திறனுடன் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ் ஒன்றினை கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பதியப்படும் டேட்டாவிற்கான பாதுகாப்பினை அளிக்கும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
நல்ல வேகத்தில் டேட்டாவினைப் படித்தல், உறுதியான வெளி வடிவமைப்பு, அதற்கான அருமையான சாப்ட்வேர் என இது பயன்பாடுகள் கொண்ட டிரைவாக உள்ளது. அதிகக் கொள்ளளவு என்பதால், டேட்டாவினை எளிதில் எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லாமல் செயல்பட முடிகிறது.
மடித்து எடுத்துச் செல்லக் கூடிய மெட்டல் ஜாக்கெட் இதற்கு பாதுகாப்பினை வழங்குகிறது. இந்த டிரைவைப் பிரித்து பாஸ்வேர்ட் பாதுகாப்பு கொண்ட தனிநபர் பிரிவாக ஒன்றும், பொதுவான ஒன்றுமாக வைத்துக் கொள்ளலாம். இதனால் பயன்படுத்துபவர் அனுமதியின்றி டேட்டாவினைப் பாதுகாக்கலாம்.
டேட்டா எழுதுவதில் உள்ள வேகம் எதிர்பார்க்கும் அளவில் இல்லாதது ஒரு குறையே. யு.எஸ்.பி. எக்ஸ்டென்ஷன் கேபிள் ஒன்று இதனுடன் வழங்காததும் பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. ஐந்து ஆண்டு கால வாரண்டியுடன் ரூ.5,777 விலையிடப்பட்டுள்ளது.
இந்த கொள்ளளவிற்கு விலை இது சற்று அதிகம் தான். விரைவில் விலை குறைக்கப் படலாம். பொறுத்து வாங்கலாம்.
0 comments :
Post a Comment