ஏசர் நிறுவனம் அண்மையில் நடந்த கருத்தரங்கில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட தன் நிறுவனம் வெகு நாட்கள் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய திருப்பத்தில் இன்னொரு திருப்பமும் ஏற்பட்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு சிப்களை வடிவமைத்து தரும் நிறுவனங்கள் மொபைல் போன்களின் இயக்கத்திற்கான சிப்களையும் தரத் தொடங்கி உள்ளன. இன்டெல் தன் சிப்களைத் தர எல்.ஜி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கம்ப்யூட்டர்களுக்கு கிராபிக்ஸ் கார்டுகளை வடிவமைத்துத் தரும் என்விடியா நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரித்து வழங்கும் மூன்று நிறுவனங்களுக்கு தன் டெக்ரா ப்ராசசரை வடிவமைத்துத் தர முன்வந்துள்ளது. இதே வேளையில் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதிலும் போட்டி தோன்றியுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் இன்டெல் முன்னணியில் இந்த போட்டியை நடத்துகின்றன.
மொபைல் போன் தயாரிப்பில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள்
ஆப்பிள் நிறுவனம் ஐ–போன் தயாரித்து மொபைல் போன் பயன்பாட்டிலும் விற்பனையிலும் தனி சாதனை படைத்த பின்னர் மற்ற கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.
மொபைல் போன் நாளுக்கு நாள் முழுமையான ஒரு கம்ப்யூட்டராக இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்நாளில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கினால் இன்னும் பல கம்ப்யூட்டர் வசதிகளைப் பெரிய அளவில் மொபைல் போன்களில் எதிர்பார்க்கலாம்.
இன்டர்நெட் பிரவுஸ் செய்திடும் வசதி, இரு வழி வீடியோ கான்பரன்ஸ் வசதி, ஹை டெபனிஷன் மூவி என கம்ப்யூட்டர் இன்று வெற்றி கண்டிருக்கும் வசதிகள் பல மொபைல் போன்களில் கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகியுள்ளன.
இதனால் ஏற்கனவே மொபைல் போன் சந்தையில் தங்களை உறுதிப் படுத்திக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களுக்கு இந்த கம்ப்யூட்டர் நிறுவனங்கள் நிச்சயம் புதிய வழி போட்டியைத் தருகின்றன. இந்த வகையில் முதலில் நுழைந்தது ஆப்பிள் நிறுவனம்.
ஏறத்தாழ ஒரே வகை போன் களுடன் தூங்கிக் கொண் டிருந்த மொபைல் போன் இண்டஸ்ட்ரியை புதிய வழிகளுக்கு இழுத்துச் சென்றது ஆப்பிள் ஐ–போன். பின் பெர்சனல் கம்ப்யூட்டரின் பல வசதிகள் மொபைல் போனுக்குள் நுழையத் தொடங்கின.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மொபைல் போன் தயாரிப்பில் இறங்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஏசர் நிறுவனம் எட்டு மாடல்களுடன் போன் விற்பனையில் அண்மையில் வந்துள்ளது. இன்னும் பல மாடல்கள் வர இருக்கின்றன. தூக்கிச் செல்வதற்கு எளிதாக நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரித்த அசூஸ் டெக் மொபைல் போன்களையும் வடிவமைத்து வழங்குகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment