எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் பணம்; புதிய வடிவில் மோசடி

பணம் டெபாசிட் செய்தால், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வேலை தருவதாகவும், அதன்மூலம் மாதம் தோறும் பெரும் தொகை சம்பளமாக பெறலாம் எனக் கூறி ஏமாற்றியதாக ஜென் குரூப் நிறுவனம் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி உட்பட 100க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று இந்த மோசடி குறித்து புகார் செய்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் ஜென் குரூப் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தை, வசந்தாபிரபா நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம், எஸ்.எம்.எஸ்., அனுப்புவதன் மூலம் மாதம் 3,000 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரப்படுத்தியது.

இதை நம்பி, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, முதலில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனக் கூறினர். இதில் 5,000 ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை என பல திட்டங்களைக் கூறி பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறினர்.

நூற்றுக்கணக்கானோர் இதை நம்பி கடந்த ஆகஸ்ட் மாதம், அந்நிறுவனத்தில் பணத்தை டெபாசிட் செய்தோம்.இதற்காக அந்நிறுவனத்தினர் எங்களுடன் 11 மாதம் கான்ட்ராக்ட் செய்து கொண்டனர்.

அந்நிறுவனம் வழங்கிய எஸ்.எம்.எஸ்.,சை மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வந்தோம். கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் இணைந்த, "புளூடூத் டிராங்கில்' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பினோம்.


ஆனால், கூறியபடி எங்களுக்கு மாதம் தோறும் வர வேண்டிய சம்பளமும் வரவில்லை; நாங்கள் டெபாசிட் செய்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. நேரில் சென்று பார்த்தபோது, அந்த அலுவலகம் மூடியிருந்தது.இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes