சட்டசபை கூட்டத்தை நான்கே நிமிடங்களில் நடத்தி முடித்து, சரித்திரம் படைத்தது. கேரள மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் கூடியது.
ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர் பதவி குறித்து விவாதிக்கவும், அதற்கான சட்டத்தை பத்து ஆண்டுகளுக்கு நீட்டித்து அங்கீகரிக்க, சிறப்பு சட்டசபை கூட்டம் நடந்தது.
இது தொடர்பாக பார்லிமென்டில் இரு சபைகளிலும், மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், வரும் ஜன., 25ம் தேதிக்குள், 15 மாநிலங்களில் நிறைவேற்றப்படவேண்டும்.
இம்மசோதா, கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முதல்வர் அச்சுதானந்தன் கொண்டு வந்த இத்தீர்மானத்தை, அனைத்து உறுப்பினர்களும் அனுமதி வழங்கிய பின், சபாநாயகர் ராதாகிருஷ்ணன், மறுதேதி குறிப்பிடாமல் சபையை ஒத்தி வைத்தார். சிறப்பு சட்டசபை கூட்டம், 9 மணிக்கு துவங்கி, 9.04க்கு முடிவடைந்தது
0 comments :
Post a Comment