வேகமாக டெக்ஸ்ட் அமைக்க குவெர்ட்டி கீ போர்டு மற்றும் இரண்டு சிம்கள் இயக்கம் என்ற இந்த இரண்டு வசதிகள் தான் தற்போது மொபைல் வாங்குவோர் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதன் அடிப்படையில் மைக்ரோமாக்ஸ் க்யூ3 டூயல் சிம் போன் வெளியாகியுள்ளது. இதன் இன்னொரு சிறப்பு குறைந்த விலை.
இதன் வண்ணத்திரை 220 x 176ரெசல்யூசனில் 2.2 அங்குல அகலத்தில் உள்ளது. குறைவான எடையில் கையாள்வதற்கு எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீ பேட் கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன.
அழுத்துவதற்குச் சற்று எளிதாக இல்லை என்றாலும், பழக்கத்தில் சரியாகிவிடுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, சிறிய யு.எஸ்.பி. போர்ட், தனியே சார்ஜிங் போர்ட் என வாடிக்கையாளர்களுக்கு சிரமம் கொடுக்காத வகையில் அனைத்தும் அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மியூசிக் பிளேயருக்கு ஈக்குவலைசர் போன்ற அமைப்புகள் இல்லை என்றாலும், ஆடியோவின் தன்மை நன்றாக உள்ளது. ரெகார்டிங் வசதியுடன் எப்.எம். ரேடியோ இயங்குகிறது. வாய்ஸ் ரெகார்டர் வசதியும் உள்ளது. வீடியோ பிளேபேக் வசதியில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
இதன் பிரவுசர் வேகமாக இயங்காவிட்டாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் நெட்வொர்க்குடன் இணைந்து இயங்குகிறது. ஆனால் ஆப்பரா மினி இன்ஸ்டால் செய்தால் வேகம் கூடுகிறது. பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் இமெயில்களை எளிதாக டவுண்லோட் செய்திட முடிகிறது. இணைக்கப்பட்டுள்ளA2DP இணைந்த புளுடூத் வசதியும் நல்ல செயல்பாட்டினைக் காட்டுகிறது.
டெக்ஸ்ட் பைல்களுக்கான இ புக் ரீடர், கரன்சி கன்வர்டர், வேர்ல்ட் கிளாக், பொழுது போக்க உதவும் புதிர் கட்ட விளையாட்டு ஆகியவையும் நமக்கு போனஸ் வசதிகளாகக் கிடைக்கின்றன. 2 ஜிபி மெமரி வரை இதில் நீட்டித்துக் கொள்ளலாம். 1.3 எம்பி கேமராவில் எடுக்கும் படங்கள் அவ்வளவு நல்ல தன்மையில் இல்லை.
பேட்டரி சாதாரண பயன்பாட்டில் இரண்டு நாட்களுக்கு தாங்குகிறது. தொடர்ந்து பேசினால் 3 மணி நேரம் பயன்படுத்தலாம். குவெர்ட்டி கீ போர்டு, இரண்டு சிம் பயன்பாடு, இணைய நெட்வொர்க் இணைப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டால் ரூ.4,500க்கு இந்த போன் சரியான தேர்வாக அமையும்
0 comments :
Post a Comment