உலகின் அனைத்து நாடுகளும், அவர்களின் பொருளாதார வளத்திற்கேற்ற வகையில் தகவல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த வேகம், உலகெங்கும் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது. இந்த கருத்தினை பன்னாட்டளவிலான தொலைதொடர்பு அமைப்பு (International Telecommunications Union) தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாடும் மொபைல் போன் பயன்பாட்டில் இரண்டு இலக்க அளவில் வளர்ச்சியைக் கொண்டுள்ளன. உலக அளவில் 600 கோடி மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இதில் சீனா மற்றும் இந்தியா தலா நூறு கோடிக்கு மேல் மொபைல் போன் இணைப்புகளைக் கொண்டுள்ளன.
தகவல் தொழில் நுட்பத்தினை மிகவும் அதிகமாகவும், பயன் தரும் வகையிலும் கொண்டிருக்கும் நாடுகளில், ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து வரிசையாக இடம் பெற்றுள்ளன. 155 நாடுகளில் கணிக்கப்பட்ட ஆய்வில், இவையே முதல் நான்கு இடத்தைப் பெற்றுள்ளன.
டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதில் மக்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை நீக்கி அனைவரும் இவற்றின் மூலம் தகவல் தொடர்பினைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் நடவடிக்கை எடுக்கும் நாடுகளில், ருவாண்டா, கானா, பிரேசில், சவுதி அரேபியா, கென்யா மற்றும் பஹ்ரைன் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மொபைல் வழி பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் பெரும்பாலான நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. உலக அளவில் இது 40% ஆகவும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது78% ஆகவும் உள்ளது.
நிலையான சாதனங்கள் வழி இன்டர்நெட் இணைப்பின் எண்ணிக்கை மொபைல் வழி இன்டர்நெட் பெற்ற இணைப்புகளில் பாதியளவே உள்ளது. பிராட்பேண்ட் இணைப்பிற்கான கட்டணம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
1 comments :
உடனடி தகவலுக்கு நன்றி...
Post a Comment