வரும் 2016ல் இந்தியாவில் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும் என இத்துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன் விற்பனை 25 கோடியே 10 லட்சத்தைத் தாண்ட உள்ளது. இது நடப்பு 2012 ஆம் ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 13.5% கூடுதலாக இருக்கும்.
இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. மொபைல் போன் தயாரித்து விற்பனை செய்வதில், ஏறத்தாழ 150 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், குறைந்த விலை மொபைல் போன்களைத் தயார் செய்வதில் கவனம் காட்டி வருகின்றன.
மொத்தத்தில் 91% போன்கள் இந்த வகையில் குறைந்த விலை மொபைல் போன்களாக உள்ளன.
ஸ்மார்ட் போன் வாங்குவது அதிகரித்து வருவதும், முதல் முறையாக போன்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், இந்நிலையில் இயங்கும் நிறுவனங்களுக்குச் சவாலாக அமைந்து வருகின்றன.
சீன நிறுவனங்களும் பல்வேறு வழிகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக இயங்குகின்றன.
இவற்றால், இந்திய நிறுவனங்கள் மிகக் கஷ்டப்பட்டே தங்கள் விற்பனைச் சந்தையைத் தக்க வைக்க முடிகிறது.
0 comments :
Post a Comment