வேர்ட் டாகுமெண்ட் தேதியைத் தானாக மாற்ற


வேர்ட் தொகுப்பில் ஆவணங்களை உருவாக்குகையில், அதில் உள்ள தேதியினை, பயன்படுத்தும் நாளுக்கேற்றபடி அமைக்க விரும்புவோம். 

எடுத்துக் காட்டாக, ஒரு கடிதம் பலரை வெவ்வேறு நாட்களில் சென்றடைய வேண்டியதிருக்கலாம். இது ஒரே நாளில் அச்செடுத்து அனுப்பப்படாமல், பல நாட்களில் அனுப்பப் படலாம். 

அப்போது தேதியை, அந்த அந்த நாளில் திருத்தாமல், தானாகவே வேர்ட் அன்றைய தேதிக்கு மாற்றிக் கொள்ளும்படி அமைத்துவிடலாம். இதற்கான வழிகளைப் பார்ப்போம். 

இங்கு ஆவணம் அல்லது அதற்கான டெம்ப்ளேட் என்று சொல்லப்படும் கட்டமைப்பில் இந்த மாற்றத்திற்கான வழி முறையினை மேற்கொள்ளலாம். 

1. கர்சரை ஆவணத்தின் எந்த இடத்தில் தேதி தானாக மாற வேண்டுமோ அங்கு அமைக்கவும். 

2. அடுத்து Insert | Date And Time செல்லவும்.

3. Available Formats என்ற பெட்டியிலிருந்து, தேதி எந்த வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த எடுத்துக் காட்டுக்களில், நீங்கள் என்று இதனை அமைக்கிறீர்களோ, அந்த தேதி காட்டப்படும். இதே தேதி தான் அமைக்கப்படுமோ என்று குழப்பமடைய வேண்டாம். விருப்பப்படும் வகையிலான வடிவத்தினைத் தேர்ந்தெடுக்கவும். 

4. பின்னர், Update Automatically என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இங்கு தேதி, தேதியாக அமைக்கப்படாமல் ஒரு பீல்டாக அமைக்கப்பட்டுள்ளது. (இந்த பீல்டு குறியீடு எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று அறிய, சிறிது நிழல் படிந்தாற்போல் இருக்கும் இதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Toggle Field Codes என்பதில் கிளிக் செய்து பார்க்கவும்.) 

இனி ஒவ்வொருமுறை, இந்த ஆவணத்தைத் திறக்கும்போதும், அச்சடிக்கும் போதும், இந்த இடத்தில், அன்றைய நாளுக்கான தேதி, நீங்கள் தேர்ந்தெடுத்த வடிவத்தில் கிடைக்கும்.

இதற்கு மாறாக, இந்த இடத்தில் ஒரே தேதி தான் வேண்டும் என விரும்பினால், மீண்டும் மேலே சொன்னபடி சென்று, செட் செய்து Update Automatically என்ற பெட்டிக்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at October 18, 2012 at 9:51 PM said...

பயன் தரும் தகவலுக்கு மிக்க நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes