எக்ஸ்பீரியா வரிசையில் ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச், சிஸ்டத்தில் இயங்கும் இரு மொபைல் போன்களை சோனி நிறுவனம், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.
இவற்றில் இரண்டாவது மாடல் இருசிம் இயக்க போனாகும். இவை முறையே ரூ.10,000 மற்றும் ரூ.10,500 என விலையிடப்பட்டுள்ளன. எக்ஸ்பீரியா டிபோ மற்றும் எக்ஸ்பீரியா டிபோ டூயல் என இவை பெயரிடப் பட்டுள்ளன.
இவற்றின் சி.பி.யு. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகின்றன. 3.2 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 512 எம்பி. நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இவை இரண்டும் 3ஜி போன்களாகும்.
4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் கொண்ட 3.2 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது.
480 பி வீடியோ இயக்கம் கிடைக்கிறது. எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 3ஜிபி உள் நினைவகம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபியாக உயர்த்தும் வசதி, அக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், 5 மணி நேரம் பேசும் வசதி, 470 மணி நேரம் தங்கும் திறன், 36 மணி நேரம் பாட்டு, 3 மணி நேரம் வீடியோ இயக்க மின்சக்தி தரும் பேட்டரி ஆகியவை இந்த இரண்டு போன்களிலும் கிடைக்கின்றன.
இவற்றின் பரிமாணம் 3.4 x 2.2 x 0.4 (13 மிமீ) அங்குலம். எடை 100 கிராம்.
போனுடன் ஸ்கிரீன் பாதுகாப்பு பட்டை, மைக்ரோ யு.எஸ்.பி.கேபிள், மைக்ரோ சிம் அடாப்டர் ஆகியவையும் கிடைக்கின்றன. கருப்பு, நேவி புளு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் இவை வந்துள்ளன.
இரண்டு சிம் போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டும் கிடைக்கிறது. சில இணைய தளங்களில், இந்த இரண்டு போன்களும் சற்று விலை குறைவாகக் கிடைக்கின்றன. சில மொபைல் போன் சேவை நிறுவனங்களிடம் வாங்கும்போது, போன் பயன் படுத்துவதிலும் சலுகைகள் தரப்படுகின்றன.
0 comments :
Post a Comment