விண்டோஸ் 8 சிஸ்டம் வர்த்தக ரீதியாக மக்களுக்கு வெளியிடப்பட இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு, இணையத்தில் கிடைக்கும் வகையில் தரப்படுகின்றன.
இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிக்கும் பல டெவலப்பர்கள், மிக வேகமாக இவற்றை வடிவமைத்து வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களிலும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், இத்தகைய புரோகிராம்கள் அதிகம் தேவைப்படும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன.
செப்டம்பர் 21 அன்று, இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை, 2,000 ஐக் கடந்து 2,079 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இவற்றில் 83% புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. செப்டம்பர் 9ல் கிடைத்த புரோகிராம்களில் 89% புரோகிராம்கள் இலவச புரோகிராம்களாக இருந்தன.
இவ்வாறு அதிகப்படியான எண்ணிக்கையில் அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைப்பதற்குக் காரணம், விண்டோஸ் 8 தொகுப்பு, நுகர்வோர் பயன்படுத்தும் வகையில் இலவசமாகத் தரப்பட்ட போது பல லட்சம் பேர் அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பதே.
இப்போதும் நாளொன்றுக்கு இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் தினந்தோறும் சராசரியாக 100 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன.
எனவே, விண்டோஸ் 8 வெளியாகும் போது, இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் எண்ணிக்கை 5,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
0 comments :
Post a Comment