கூகுள் மெயில் பாதுகாப்பானதா?

கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது. எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு, நம் தேவையின் போது தரப்படுகின்றன.

சரி, இவை என்றென்றும் பாதுகாப்பாக இருக்குமா? என் அதிமுக்கிய பைல்களை சேவ் செய்து வைத்துள்ளேனே? என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம்.

கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் என்றும் பத்திரமாக இருக்க, ஒன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில், நாம் காப்பி எடுத்து வைக்கிறோம். ஆனால், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் நீங்கள் பைல்களை, ஜிமெயில் தளத்த்தில் சேவ் செய்வது போல, சேவ் செய்தால், அதற்கு ஒரு பேக் அப் காப்பி கூட எடுத்து வைத்திடத் தேவை இல்லை.

இது குறித்து கூகுள் பாதுகாப்பு இயக்குநர் ஆரன் பெஜன் பாம் என்பவரிடம் கேட்ட போது, "ஜிமெயிலில் உள்ள அனைத்தும், ஒன்றுவிடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வர்களில் சேவ் செய்து காப்பாற்றப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு இழப்பு குறித்து எதுவும் தெரியாது.

தானாகவே இன்னொரு சர்வரில் உள்ள காப்பி பைல் கிடைக்கும்' என்றார். இது கட்டணம் செலுத்தி ஜிமெயில் அல்லது கூகுளின் வேறு வசதிகளைப் பயன்படுத்துவோருக்காக இருக்கலாம். நம்மில் பெரும்பாலானவர்கள், ஜிமெயிலை இலவசமாகவே பெற்று பயன்படுத்தி வருகிறோம். நாம் பதிந்து வைத்திடும் பைல்களும் இதே போல பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.

இதற்குப் பதில் அளித்த ஆரன் பெஜன் பாம் இது குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். நம்பிக்கையில் தான் நம் செயல்பாடே உள்ளது என்றார்.

நிறுவனங்கள் எல்லாம் மற்ற பெரிய நிறுவனங்களால், கையகப்படுத்தப்படும் காலம் இது. கூகுள் நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கிவிட்டால், நம்மால் தேக்கி வைத்த பைல்கள் நமக்குக் கிடைக்குமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.

நியாயமான கேள்வி என்றாலும், நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கைவிட்டு இழப்பினை ஏற்படுத்த எண்ணாது எனவே பலரும் நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர்.

மேலும், ஜிமெயில் POP and IMAP என இருவகை மின்னஞ்சல்களைக் கையாள்வதால், ஜிமெயில் தளத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள், ஜிமெயில் அஞ்சல்களை, அவுட்லுக் தண்டர்பேர்ட் அல்லது இடோரா போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் மூலம் கம்ப்யூட்டரில் இறக்கி வைத்துக் கொள்ளலாம்.

அல்லது Filip Jurcícek தரும் இலவச ஜிமெயில் பேக் அப் (gmailbackup) புரோகிராமினைப் பயன்படுத்தி பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதனை http://www. gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 11, 2012 at 11:20 AM said...

பயனுள்ள பதிவு...

விளக்கம் அருமை...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes