இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டு வெற்றி பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் நிஞ்சா 2 ஏ 56 மொபைல் போனை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிட்ட நிஞ்சா ஏ 50 மற்றும் ஏ 52 சூப்பர் போன் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதனைத் தொடர்ந்து இந்த மொபைல் போனை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த போனின் சிறப்பு அம்சம், இதில் உள்ள A.I.S.H.A எனப்படும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன் அப்ளிகேஷனாகும்.
இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசரைக் கொண்டுள்ளது.
ஆண்ட்ராட்ய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ராம் மெமரி 256 எம்பி. போனின் ஸ்டோரேஜ் மெமரி 516 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மூலம் 32 ஜிபி ஆக இதனை அதிகப்படுத்தலாம்.
1400 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 3 எம்பி கேமரா இயங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,000 என மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.
பதிவு செய்து இணைய தளம் மூலம் வாங்கிடhttp://ncarry.nimbuzz.com/ micromax/product.php?product_id=1968 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
1 comments :
நல்லதொரு கைபேசி அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்...
அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
Post a Comment