அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

எப்.பி.ஐ. என (FBI Federal Bureau of Investigation) அழைக்கப்படும் அமெரிக்க உளவுத்துறை, அண்மையில் பரவி வரும் வைரஸ் குறித்த எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டு, திரைக்காட்சி நிறுத்தப்பட்டு, ""நீங்கள் தவறான தளத்தைப் பார்க்க முயற்சிக்கிறீர்கள்.

எனவே உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமானால், குறிப்பிட்ட கட்டணத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும்'' என அறிவிப்பும், அபராதத் தொகை செலுத்துவதற்கான லிங்க்கும் தரப்படுகிறது.

இது போல நிகழ்வுகள் அமெரிக்க நாட்டில் மட்டுமின்றி, பன்னாட்டளவிலும் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து எப்.பி.ஐ. அமைப்பின் இன்டர்நெட் குற்றப் பிரிவு அதிகாரி டோன்னா கிரிகோரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "" இது Reveton ransomware என்னும் வைரஸால் ஏற்படுகிறது.

பலர் எங்களுக்கு இது குறித்து புகார் அனுப்பி உள்ளனர். பலர் அபராதத் தொகையையும் செலுத்தி உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையினை எப்.பி.ஐ. எடுக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து வெளியேற இதுவரை எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கும் அப்டேட் பைல் வெளியிடப்படவில்லை.

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் சாதாரணப் பயனாளரால், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீள முடியவில்லை. விரைவில் தீர்வு கிடைக்கலாம்.


2 comments :

Massy spl France. at August 26, 2012 at 5:33 PM said...

பிரான்சில் வசிக்கும் எனது கணினியும் கூட இங்கு குறிப்பிட்டுள்ளது போன்ற வைரசால் முடக்கப்பட்டு இருக்கிறது. முதலில் நான் பயந்து மிரண்டு போனாலும் நான் இதுவரை யாருக்கும் பணம் கட்டவில்லை.
நான் உபயோகிப்பது விண்டோசின் செக்யூரிட்டி எசன்சியல் ஆண்டி வைரஸ்.
இது நடந்து ஒரு மாதம் ஆகின்றது. என்ன செய்வதென்று தெரியாமல் எரிச்சலாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் at August 27, 2012 at 6:40 PM said...

தகவலுக்கு மிக்க நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes