ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றவற்றைக் காட்டிலும் மிக வேகமாக விற்பனை செய்து வரப்படுகிறது என்பதைப் பற்றி யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதனை அவர்கள் நீக்கிவிடலாம்.
அண்மையில் வெளியான ஸ்மார்ட் போன் விற்பனை குறித்த தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன. சாம்சங் நிறுவனத்திற்கெதிரான ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் வர இருப்பது குறித்த தகவல் என எத்தனை இடைஞ்சல்கள் இருந்தாலும், சாம்சங் காலக்ஸி எஸ் 3 தன் விற்பனையில் புதிய இலக்குகளை எட்டியுள்ளது.
நாளொன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்து 90 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் காலக்ஸி எஸ் 3 விற்பனையாகிறது. மே 29ல் அறிமுகமாகி, பன்னாட்டளவில் இரண்டே மாதங்களில், ஒரு கோடி என்ற இலக்கினை எளிதாக அடைந்து தொடர்ந்து இதன் விற்பனை உயர்ந்து வருகிறது.
அடுத்த ஆப்பிள் ஐ போன் வர குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்பதால், இதன் விற்பனை பல புதிய இலக்குகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையை அடைய சாம்சங் கேலக்ஸி எஸ்2 ஸ்மார்ட் போனுக்கு ஐந்து மாதங்கள் ஆயின.
சாம்சங் நிறுவனத்தின் மொபைல் கம்யூனிகேஷன் பிரிவின் தலைவர் அண்மையில் இதனைத் தெரிவித்தார்.
1 comments :
தற்போது தான் வாங்கி கொடுத்தேன்... (மைத்துனருக்கு)
நன்றி…
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
Post a Comment