வேர்ட் தொகுப்பில் தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க

வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான்.

அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.

தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும்.

பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள்.

அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.


வரி அழிக்க:

வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வரி டெக்ஸ்ட்டை டைப் செய்துவிட்டீர்கள். அப்புறம் தான் தெரிகிறது. அந்த வரி தேவையில்லையே என்று. உடனே என்ன செய்யலாம்? பின்னால் உள்ள கர்சரை பேக் ஸ்பேஸ் கீ மூலம் தட தட தட் என்று தட்டிக் கொண்டே செல்லுகிறீர்களா? ஏன், சார் இந்த வேலை? வரியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு செல்லுங்கள்.

பின் ஷிப்ட் + என்ட் கீகளை அழுத்துங்கள். வரியின் முடிவு வரை தேர்ந்தெடுக்கப்படும். அடுத்து பேக் ஸ்பேஸ் அல்லது டெலீட் அழுத்துங்கள். ஏன், ஸ்பேஸ் கீ அழுத்தினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரி அழிக்கப்படும்.


3 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 4, 2012 at 6:42 AM said...

எளிதான வழியை சொன்னதற்கு மிக்க நன்றி.....

”தளிர் சுரேஷ்” at August 4, 2012 at 4:49 PM said...

சிறப்பான தகவல்! நன்றி!

”தளிர் சுரேஷ்” at August 4, 2012 at 4:49 PM said...

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes