பிளாக்பெர்ரி நிறுவனம் 4ஜி எல்டிஇ பிளேபுக் டேப்லட்டினை அடுத்த வாரம் கனாடாவில் அறிமுகம் செய்கிறது பிளாக்பெர்ரி இந்த டேப்லட்டில் உள்ள 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம், அதி வேகத்தில் தகவல்களை டவுன்லோட் செய்ய உதவும்.
பிளாக்பெர்ரியின் இந்த புதிய டேப்லட் 32 ஜிகாபைட்ஸ் மெமரி வசதியுடன் களமிறங்குகிறது.
4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் அறிமகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெர்ரியின் மின்னணு சாதனங்களுக்கு நமது நாட்டிலும் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது.
விரைவில் இந்த 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் இந்தியாவிற்கும் வரும் என்று தகவல்கள் வருகின்றன.
0 comments :
Post a Comment