தன் ஸ்மார்ட் போன் வரிசைகளில், அடுத்ததாக காலக்ஸி நோட் ஸ்மார்ட் போனின் அடுத்த மாடலை சாம்சங், வரும் ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்க உள்ளது. என்று வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் என அன்று தெரிய வரும்.
அல்லது அதே நாளில் வெளியிடப்படலாம். முந்தைய நோட் 1 மாடலைக் காட்டிலும் இதில் இருக்கலாம் என்று கருதப்படும் அம்சங்களை இங்கு காணலாம்.
ஏற்கனவே இருக்கும் 5.3 அங்குல திரைக்குப் பதிலாக, 5.5 அங்குல திரை இருக்கும். இது AMOLED டச் ஸ்கிரீனாக 1680 x 1050 ரெசல்யூசனுடன் கிடைக்கும்.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4G LTE, EDGE, WiFi, WiFi Direct, NFC ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்கும். MHL சப்போர்ட்டுடன் ஜி.பி.எஸ். வசதி இருக்கும். புளுடூத் வசதியில் அதன் இயக்கம் 4 கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஹை டெபனிஷன் வீடியோ பதிவு மற்றும் இயக்கம் தரும் 13 எம்பி திறனுடன் கூடிய கேமரா இருக்கும். வீடியோ அழைப்புகளுக்கான இன்னொரு கேமரா முன்புறம் இருக்கும். 16, 32 மற்றும் 64 ஜிபி யுடன் கூடிய மூன்று மாடல்கள் கிடைக்கலாம்.
ஆடியோ வீடியோ அவுட்புட் கிடைக்க Mஏஃ பயன்படுத்தப்படும். 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் இருக்கும்.
காலக்ஸி 2ல் தரப்பட்ட ஆர்.ஜி.பி. திரைக் காட்சிக்குப் பதிலாக, Pentile matrix டிஸ்பிளே தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக காலக்ஸி எஸ் வரிசையில் இயங்கும் S Beam, Smart Stay eye tracking, Smart Voice போன்ற தொழில் நுட்ப வசதிகள் இதிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 comments :
மிக்க நன்றி நண்பரே...
தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment