கூகுள் பைபர்- மின்னல் வேக இன்டர்நெட்

கூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது.

இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும், கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கூகுள் பைபர் (Google Fiber) என்ற பெயரில், அதி வேக, மின்னல் வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது.

2011 ஆம் ஆண்டில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டது. பைபர் ஆப்டிக் வழி தகவல் தொடர்பினை இணைய தொடர்பிற்குத் தருவதே இந்த திட்டம். உலகிலேயே அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை இதன் மூலம் பெறலாம்.

மின்னல் வேக டேட்டா பரிமாற்றம் என்பது நிஜமாகவே இதன் மூலம் நடைபெறும். ஒரு நொடியில், ஒரு கிகாபிட் பிட்ஸ் டேட்டா பரிமாறப்படும். ஆப்டிகல் பைபர் மூலம் இது சாத்தியமாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கினை இதற்கென அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்த கூகுள் சோதனை நடத்தியுள்ளது.

இன்டர்நெட் மட்டுமின்றி, வீடியோ, தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. ஆனால், தொலைபேசி சேவை இதில் சேர்க்கப்படவில்லை.

தொடக்கத்தில் கேன்சாஸ் நகரத்தில் இது அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,100 இல்ல வளாகங்கள் முதல் சந்தாதாரர்களாக விண்ணப்பித்தன. சென்ற ஜூலையில் இவை பதியப்பட்டன. மூன்று வகைகளில் இது கிடைக்கும்.

இலவச இன்டர்நெட் இணைப்பு, மாதம் 70 டாலர் செலுத்துவோருக்கான ஒரு கிகா பிட் வேக இன்டர்நெட் இணைப்பு மற்றும் 120 டாலருக்கு, தொலைக்காட்சி சேவை இணைந்த இன்டர்நெட். தொலைக்காட்சி இணைந்த சேவையில், ஒரு டெராபைட் அளவிலான கூகுள் ட்ரைவ் வசதி தரப்படுகிறது.

அத்துடன் ஒரு டெராபைட் டி.வி.ஆர். ரெகார்டிங் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் எட்டு தொலைக் காட்சி சேனல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்து, பின்னர் வேண்டும் போது பார்த்துக் கொள்ளலாம். இந்த வகை சேவை பெறுவோருக்கு நெக்சஸ் 7 டேப்ளட் பிசி ஒன்று தரப்படுகிறது.

இதனை ரிமோட் கண்ட்ரோல் போல பயன்படுத்தலாம். இலவச இன்டர்நெட் வகையில், இன்ஸ்டலேஷன் கட்டணமாக 300 டாலர் கட்டிவிட்டால், ஏழு ஆண்டுகளுக்கு நொடிக்கு 5 மெகா பைட் டவுண்லோட் மற்றும் நொடிக்கு ஒரு மெகா பைட் அப்லோட் இன்டர்நெட் சேவை, அப்லோட் மற்றும் டவுண்லோட் பிரிவில் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றிக் கிடைக்கும்.

இந்த 300 டாலர் கட்டணத்தை, ஓராண்டு காலத்தில் தவணை முறையில் செலுத்தலாம். மாதம் 70 டாலர் கட்டணம் செலுத்துவோருக்கு, இன்ஸ்டலேஷன் கட்டணம் இல்லை. நொடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் அப்லோட் மற்றும் டவுண்லோட் இருக்கும். கூகுள் ட்ரைவில் ஒரு டெரா பைட் அளவு இடம் இலவசம்.

கேன்சஸ் நகர வாசிகள் முன் கூட்டியே பதிவு செய்திட, இணைய தளப் பக்கம் ஒன்றை கூகுள் திறந்துள்ளது. வரும் செப்டம்பரில் வீடுகளுக்கான இணைப்பு தரப்படும். ஒரே நேரத்தில் இணையான இணைப்பினை அனைவரும் பெறுவார்கள். குறிப்பிட்ட ஏரியாவில், எதிர்பார்க்ப்படும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் சேர்ந்த பின்னரே, பைபர் நெட்வொர்க்கினை அமைத்து, கூகுள் மின்னல் வேக இன்டர்நெட் சேவையைத் தரத் தொடங்கும்.

இந்த சேவையில், நொடிக்கு ஒரு கிகா பிட் டேட்டா கிடைக்கும். தற்போது அமெரிக்காவில் கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தைப் போல, இது நூறு மடங்கு அதிகமானது. என்னதான், பெரிய அளவில் விளம்பரம் செய்தாலும், அமெரிக்க நகரங்களில் இன்டர்நெட் டவுண்லோட் வேகம் நொடிக்கு 4 மெகா பிட்ஸ் தான்.

கேன்சஸ் நகரம், அமெரிக்காவில் இரு மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தர கூகுள் முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி, முன்பு பிரபலமான "கிவ் அ லிட்டில் பிட்' (“Give a Little Bit”) என்ற பாடல் "கிவ் எ கிகாபிட்' (“Give a Giga Bit”) என ரீமேக் செய்யப்பட்டது.

கேன்சஸ் நகரின் ஒரு பிரிவான டொபேகா (Topeka) என்ற பெயர் தற்காலிகமாக கூகுள் என மாற்றி அழைக்கப்பட்டது. ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சரசோடா (“Sarasota”) என்ற தீவு தற்காலிகமாக கூகுள் தீவு என அழைக்கப்பட்டது.

கூகுள் பைபர் இன்டர்நெட் வெற்றி அடைந்தால், தற்போது இன்டர்நெட் சேவை வழங்கி வரும், இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நிச்சயம் இழப்பார்கள்.

இந்த அளவிலான வேகத்திலும், வகைகளிலும் சேவையினை அவர்களால் தர முடியாது. கூகுள் தற்போது மக்கள் வசிக்கும் இல்லங்களுக்கு மட்டுமே இந்த இணைப்பினைத் தர இருக்கிறது. விரிவடையும் காலத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கும் இதனை நீட்டிக்கலாம்.


1 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 8, 2012 at 7:57 AM said...

அறியாத தகவல்... எங்கள் ஊருக்கு எப்போது வரப்போகுதோ....?
பகிர்வுக்கு நன்றி… தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes