கம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்

1. யு.இ.எப்.ஐ. (UEFI): யூபை எனச்சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பச் சொல், புதியதாய் இனி கம்ப்யூட்டர் இயக்கத்தில் இணைக்கப்பட இருக்கும் இடைமுகம் ஒன்றைக் குறிக்கிறது.

இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கம்ப்யூட்டர்களில் நீக்கமற இடம் பெற்றிருக்கும் BIOS (Basic Input Output System) interfaceக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட இருக்கிறது.

நீங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன ஹார்ட்வேர் சாதனங்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று இந்த UEFI இடைமுகம் ஒரு ஸ்டாக் எடுக்கும். தன் சோதனையில் அறியப்படும் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் நன்கு இயங்கும் தன்மையில் உள்ளனவா எனக் கண்டறியும்.

எல்லாம் சரியாக இருக்கிறது என அறிந்தவுடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஆன் செய்து பெர்சனல் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை அதனிடமும் (கூடவே உங்களிடமும்) கொடுத்துவிடும்.
இதைத்தானே பயாஸ் (BIOS)இப்போது செய்து வருகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

UEFI பலவகை சிப் கட்டமைப்பினை சப்போர்ட் செய்கிறது.(இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம். ஆனால், பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடாது. மேலும் இது 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும்.

புதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.


2. 32 பிட் , 64 பிட் விண்டோஸ் ஆக உயருமா?

முடியாது. இது தீர்வு கிடைக்காத ஒரு பிரச்னை. 32 பிட் ஹோம் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, 32 பிட் புரபஷனல் சிஸ்டமாக அப்கிரேட் செய்துவிடலாம். ஆனால் 64 பிட் பதிப்பிற்கு உயர்த்த வேண்டும் என்றால், புதியதாகத்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும். அப்கிரேட் செய்திட முடியாது.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன்னிடம் வரும் தகவல்களை நாம் பயன்படுத்தும் (32/64 பிட் பதிப்பு) சிஸ்டத்திற்கேற்பவே கையாள்கிறது. பொதுவாகச் சொல்வதென்றால், ஒரு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், டேட்டாவினை ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் எடுத்து இயக்கும்.

32 பிட் சிஸ்டம் அந்த அளவு டேட்டாவினை ஒரே நேரத்தில் கையாள இயலாது. இதனால் தான், விண்டோஸ் சிஸ்டம் தரும் Easy Transfer பயன்பாட்டின் மூலம், பைல்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்கள் இடையே மாற்ற முடியாது. இவற்றை அனுப்பும் மற்றும் பெறும் சாதனங்களில் உள்ள சி.பி.யு.க்கள் அடிப்படையில், மாறுபாடு கொண்ட டேட்டா கட்டமைப்பினைப் பயன்படுத்துகின்றன.

32 பிட் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுகையில், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்களையும் அந்த வேகத்திற்கேற்றதாக மாற்ற வேண்டும். 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவதற்குக் காரணமே, கம்ப்யூட்டரில் உள்ள 64 பிட் ப்ராசசரின் இயக்க வேகத்தின் அனுகூலங்களைப் பெறுவதற்காகத்தான்.

(இப்போது வரும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் 64 பிட் ப்ராசசர்களையே கொண்டுள்ளன.) இவற்றின் ராம் மெமரியும் 4 ஜிபி மற்றும் அதற்கு மேலான அளவில் உள்ளது. அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இல்லை எனில், 64 பிட் சிஸ்டத்திற்கு மாறுவது தேவையற்ற ஒன்றாகும்.


2 comments :

திண்டுக்கல் தனபாலன் at August 9, 2012 at 8:29 AM said...

பயனுள்ள தகவல்கள்...
சில சந்தேகங்கள் இருந்தது... உங்கள் பதிவின் மூலம் தீர்வு கிடைத்தது...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

நன்றி…

SNR.தேவதாஸ் at August 9, 2012 at 2:38 PM said...

தங்களிடமிருந்து தினமலர் சுட்டதா?தினமலரில் இருந்து தாங்கள் சுட்டதா?
வாழ்க வளமுடன்.
SnR.DeVaDaSs

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes