வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி பேருக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 90 கோடி பேருக்கு மேல், மொபைல் போன் வைத்துள்ளனர். தினமும் மொபைல் போன் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களில், மொபைல் போன் என்பது இன்னமும், 'பகல் கனவாக'வே உள்ளது.
புதிய திட்டம்: இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு, மொபைல் போனை இலவசமாக வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு, 'ஒவ்வொரு கையிலும் ஒரு மொபைல் போன்' என, பெயரிடவும் தீர்மானித்துள்ளது.
நாட்டில், 60 லட்சம் குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் நான்கு முதல் ஐந்து பேர் இருப்பதாக கணக்கிட்டால், மூன்று கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள்.
இவர்கள் அனைவருக்கும் இலவசமாக மொபைல் போன் வழங்கப்படும். வெறுமனே மொபைல் போனை மட்டும் வழங்காமல், ஒவ்வொரு மாதமும் 200 உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.
திட்ட செலவு: இந்தத் திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் திட்டக் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனேகமாக வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று இது தொடர்பான அறிவிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெறும் திட்டங்கள் குறித்து, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இன்னமும் உறுதி செய்யவில்லை.
3 comments :
வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
இன்னும் என்னென்ன இலவசம் என்று வரப்போகுதோ....?
நன்றி…
Post a Comment