உலகளவில் 2020க்குள் அனைத்து மொபைல்போன்களில் 'ஆன்ட்ராய்டு' வசதி ஏற்படுத்தப்படும்,'' என மலேசிய அறிவியல் பல்கலை 'ஐபிவி6' மையத்தின் துணை இயக்குனர் செல்வகுமார் மாணிக்கம் கூறினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில், 'ஆன்ட்ராய்டில் நவீன பயன்பாடான ஐபிவி 6' குறித்து தேசிய அளவிலான பயிற்சி முகாம் நடக்கிறது.
மலேசிய அறிவியல் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் ஹேமனந்தன், கெல்வின் காங், கிறிஸ்டோபர் ஆகியோர், மாணவர்களுக்கு, மொபைல்போனில் ஆன்ட்ராய்டு பயன்பாட்டின், நவீன செயல்பாடுகளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
இக்குழுவின் தலைவர் செல்வகுமார் மாணிக்கம் கூறியதாவது: உலகளவில் தற்போது மொபைல் போன்களில் 62 சதவீதம் மட்டுமே ஆன்ட்ராய்டு பயன்பாடு உள்ளது.
விலை உயர்ந்த மொபைல் போன்களில் மட்டுமே இந்த வசதியை ஏற்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஆன்ட்ராய்டில் புதிய சாப்ட்வேர் கண்டுபிடித்து, விளையாட்டு மற்றும் மனதில் தோன்றும் கண்டுபிடிப்புகளை எப்படி உருவாக்குவது, என்பது குறித்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
இந்தியாவில் முதன்முறையாக வழங்கப்பட்டு வரும் இந்த பயிற்சியில் 85 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். 2020க்குள் அனைத்து மொபைல் போன்களிலும் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
மேலும் ஆன்ட்ராய்டு ஆராய்ச்சி மூலம் வீடுகளில் பிரிட்ஜ், பேன், எலக்ட்ரிக் பொருள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியிலும் வெற்றி கிடைத்துள்ளது.
விரைவில் சாதாரண வீடுகளில் கூட ஆன்ட்ராய்டு மூலம் பிரிட்ஜ், ஏசி போன்றவற்றை வெளியிலிருந்து இயக்கும் நிலை வந்துவிடும், என்றார். கல்லூரி முதல்வர் மாரிமுத்து உடன் இருந்தார்.
1 comments :
நல்லதொரு தகவலுக்கு நன்றி ...
Post a Comment