இது டிஜிட்டல் கேமராவா அல்லது மொபைல் போனா என்று வியக்கும் வகையில் ஸ்பைஸ் நிறுவனம் தன் எஸ் – 1200 மொபைல் போனை வடிவமைத்து, மொபைல் மார்க்கட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
இதில் 12 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. முகங்களை அடையாளம் கண்டு போகஸ் செய்வது, சிரிக்கும்போது எடுப்பது, இமைத்தால் கண்டு கொள்வது, போன்ற நவீன தொழில் நுட்பங்களுடன் இந்த கேமரா உள்ளது.
12 எம்பி திறன் கொண்ட கேமரா இணைந்த மொபைல் வரிசையில் இது மூன்றாவது போனாகும். போட்டியில் முன்னுக்கு வர இதன் விலை மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கேமரா இருப்பதால், வழக்கத்தைக் காட்டிலும் சற்று தடிமனான போனாக இது உள்ளது.3 எக்ஸ் ஆப்டிகல் ஸூம், ஸெனான் பிளாஷ் தரப்பட்டுள்ளது. எடை 130 கிராம் மட்டுமே. தடிமன் 16 மிமீ இருப்பதால், பாக்கெட்டில் சற்று அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும்.
2.4 அங்குல டி.எப்.டி. திரை 240 x 320 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. வால்யூம் கீ, கேமரா ஸ்டில், கேமரா வீடியோ என தனி கீகள், ஸூம் செய்திட கீ எனத் தனித்தனியே கீகள் உள்ளன. 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் கார்டுகளுக்கான போர்ட் உள்ளது. மியூசிக் பிளேயருடன் ஈக்குவலைசர் தரப்பட்டிருந்தாலும், இதன் செயல்பாடு அவ்வளவாக மனநிறைவளிக்கவில்லை.
எப்.எம். ரேடியோவின் வெளிப்பாடு துல்லிதமாகவும் சிறப்பாகவும் உள்ளது. போட்டோக்களுக்கு போட்டோ எடிட்டர் சாப்ட்வேர் பதிந்து தரப்படுகிறது. எட்ஜ் சப்போர்ட் இருப்பதால், நம் பி.ஓ.பி. மற்றும் ஐமேப் மெயில்களை டவுண்லோட் செய்திடலாம்.
ஸ்பைஸ் போன் பயன்படுத்துபவர்களுக்கான ஸ்பைஸ் கேங் சோஷியல் தளத்துடன் நேரடி இணைப்பு கிடைக்கிறது. அத்துடன் நிம்பஸ் இருப்பதால், மற்ற சோஷியல் தளங்களையும் அடையலாம். நெட்கோர் தொகுப்பு இமெயில் டு எஸ்.எம்.எஸ். தருகிறது.
இதே போல கிரிக்கெட், வேலைவாய்ப்பு, லேட்டஸ்ட் செய்திகளுக்கான தொடர்புகள் எளிதாக்கப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத், யு.எஸ்.பி.2, டிவிக்கான அவுட்புட் ஆகியன மற்ற சாதனங்களுடனான தொடர்பினை எளிதாக்குகின்றன. இவற்றுடன் அடிப்படை வசதிகளான கால்குலேட்டர், காலண்டர், அப்பாய்ண்ட்மென்ட் டயரி, டாஸ்க் மேனேஜர், அலாரம் கிளாக் போன்றவையும் உள்ளன.
இதன்1020mAh பேட்டரி தொடர்ந்து 3 மணி நேரம் பேசும் திறன் தருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், நிதானமான பயன்பாடு இரண்டு நாட்களுக்குக் கிடைக்கிறது. இதன் குறியீட்டு விலை ரூ.14,500 என்பதால், போட்டியிடும் சோனி மற்றும் சாம்சங் போன்களுடன் இது வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை
1 comments :
NICE I WILL BUY IN FUTURE TO REPLACE OLD ONE OF OLYMBUS CAMERA
Post a Comment