இளம் வயதிலேயே குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட அழகர், ஏ டூ இசட், இனிப்பு முருகன், சங்கு கணேசன் ஆகிய நான்கு இளைஞர்கள் கஞ்சா, குடி, அடிதடி என திரிகின்றனர்.அவர்களுடன் மயில் சாமி, சிங்கம் புலியும் சேர்கிறார்கள்.
ஒரு டீக்கடையே சுற்றியே இவர்கள் வாழ்க்கை நகர்கிறது.
ஏ டூ இசட்டுக்கும் அவ்வழியாக வாக்கிங் போகும் வசதியான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்கிறது. அழகர் தனது முறைப்பெண்ணை விரும்புகிறார். இதற்கிடையில் அதே ஊரில் வட்டித் தொழில் நடத்தும் விருமன், கருத்தபாண்டி என்ற தாதா சகோதரர்களின் தங்கையை இக்கூட்டத்தில் ஒருவன் காதலிப்பதாக தவறான தகவல் வருகிறது.
சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அதை உறுதிபடுத்துவது போல் அமைகின்றன. ஆவேசமாகும் ரவுடி சகோதரர்கள் தங்கையை தூக்கிலிட்டு கொல்கின்றனர். அழகர் கோஷ்டியை தீர்த்து கட்ட ரவுடி பாண்டி தலைமையில் கூலிப்படையையும் ஏவு கின்றனர். இரு தரப்பினருக்கும் நடக்கும் மோதலும் அதனால் ஏற்படும் இழப்புகளும் மீதி கதை.
ஆக்ஷன், காதல், சென்டி மென்ட்களுடன் மதுரை கதை களத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ராசுமதுரவன்.
போலீஸ் தந்தையால் சரியாக வளர்க்கப்படாமல் கெட்டு அழியும் அழகர் பாத் திரத்தில் ஹரீஸ் வெளுத்து கட்டுகிறார். அண்ணன் பணத்தை திருடியவனையும் அவன் கூட்டாளிகளையும் சாக்கடை ஆற்றோர குடிசைப்பகுதிக்குள் நுழைந்து விரட்டி விரட்டி அடித்து நொருக்குவது பரபர.
முறைப்பெண் தன்னை காதலிப்பதாக தவறாக புரிந்து பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்து கொள் வதும் முதல் இரவில் அவள் நண்பன் அழகப்பாவை விரும்பிய விஷயம் தெரிந்து தாலியை அறுத்து நண்பனுக்கு மணமுடித்து வைப்பதிலும் நட்பின் வீரியம் காட்டுகிறார்.
சகோதரன் மகன் தன்னைப் பார்த்து கெட்டுப்போவது அறிந்து அண்ணியை தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு அனுப்புவதும் பிறகு தனியாக அவர் காலில் விழுந்து குழந்தைகள் என்னைப் போல் ஆகி விடக்கூடாதுன்னு தான் உங்களை வெளியே அனுப்பினேன் என்று கதறுவதில் விழிகளில் நீர் முட்ட வைக்கும் சீன்கள். கிளைமாக்சில் சாவில் விளிம்பில் இறந்து போன தாய்க்காக அழும்போது கூடவே அழ வைக்கிறார்.
ஏ டூ இசட்டாக வரும் ராமகிருஷ்ணன்-பூங்கொடி காதல் கலகலப்பு. பூங்கொடியின் நாய் தினமும் ராமகிருஷ்ணன் முகத்தில் சிறுநீர் கழித்து எழுப்புவது சிரிப்பு...
பூங்கொடிக்கு தாலி கட்டும் தருணம் கொலை கும்பல் வருவதும் அவர் களிடம் தப்பி மண மாலையோடு ஓடுவதும் வில்லன் காலில் விழுந்து பூங்கொடியை திருமணம் செய்து எங்கேயாவது ஓடிடுறேன். விட்ருங்க அண்ணே என்று அழுது புலம்பும்போது நெஞ்சை கனக்க வைக்கிறார். சங்கு கணேசனாக வரும் இயக்குனர் ஜெகன்நாத், இனிப்பு முருகனாக வரும் பிரகாஷ், அழகப்பாவாக வரும் ரகுவண்ணன் போன்றோரும் கேரக்டரில் வாழ்கிறார்கள்.
ரவிமரியா வல்லத்தனத்தில் மிரட்டுகிறார். தங்கை காதலிக்கிறாள் என நினைத்து தூக்கில் ஏற்றி சாகடிப்பது திடுக். அதை தற்கொலை என்று சொல்லி மறைத்து அமைதியாக வில்லத்தனத்தில் இயக்குனர் நந்தா பெரியசாமியும் பயமுறுத்துகிறார்.
சிங்கம்புலி, மயில்சாமி கூட்டணி காமெடி வயிற்றை புண்ணாக்குகிறது.
பூங்கொடி துறுதுறுவென வந்து நிர்க்கதியாகி மனதை தொடுகிறார். சுவாசிகா பரிதாபமாக வாழ்வை முடிக்கிறார். விக்ராந்த் இன்னொரு வில்லனாக பணத்துக்கு வேட்டு, குத்து செய்கிறார். ஹரிஷ் கோஷ்டியை அவர் சாகடிப்பது கொடூரம்.
இளவரசு, அலெக்ஸ், ஜாகர்தி, அகர்வால், மனோபாலா, ராஜ்கபூர் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன. மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். சப«ஷ் முரளி இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பாலபரணி ஒளிப்பதிவு மதுரையில் ஒதுக்கப்பட்ட பகுதிகளை கண்முன் நிறுத்துகிறது.
1 comments :
good creatisim.
Post a Comment